திருச்சி கிழக்கில் மீண்டும் பிரச்சாரம்.. பரபரப்பான தேர்தல் களத்தில் விஜய் அதிரடி முடிவு..! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய்யின் தவெக 234 தொகுதிகளிலும் தனித்து களம் காண்கிறது.. 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் அக்கட்சி தலைவர் விஜய் சமீபத்தில் அறிவித்தார்.. அதன்படி விஜய் திருச்சி கிழக்கு, பெரம்பூர் தொகுதிகளில் போட்டியிடுகிறார். தேர்தல் தேதி நெருங்கும் நிலையில் பிரதான கட்சி தலைவர்கள் பம்பரமாக சுழன்று தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்..

ஆனால் விஜய் மட்டும் தனது தேர்தல் பரப்புரையை அடுத்தடுத்து ரத்து செய்து வருகிறார்.. கடந்த 30-ம் தேதி பெரம்பூரில் வேட்பு மனு தாக்கல் செய்த விஜய் பெரம்பூரில் இருந்தே தனது தேர்தல் பரப்புரையை தொடங்கினார். ஆனால் அன்றைய தினம் வில்லிவாக்கத்தில் நடைபெற இருந்த பிரச்சாரத்தை ரத்து செய்துவிட்டு நீலாங்கரை வீட்டிற்கு விஜய் புறப்பட்டு சென்றார்.. போலீசார் உரிய பாதுகாப்பு வழங்கவில்லை என்பதால் அந்த பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டது..

இதையடுத்து கடலூர், திருவள்ளூர் என அடுத்தடுத்து பிரச்சாரங்கள் ரத்து செய்யப்பட்டது.. மேலும் 2 நாட்களுக்கு முன்பு சென்னையில் ரோடு ஷோ ஈடுபட்ட அவர் முழுமையாக செல்லாமல் பாதியிலேயே ரத்து செய்துவிட்டார்..

இந்த நிலையில் திருச்சி கிழக்கு சட்டமண்ற தொகுதியில் நாளை விஜய் பிரச்சாரம் செய்ய உள்ளார்.. நாளை பகல் 12 மணியளவில் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி செல்லும் அவர் திருச்சி கிழக்கு தொகுதியில் பிரச்சாரம் செய்ய உள்ளார்.. திருச்சி கிழக்கில் மீண்டும் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று நிர்வாகிகள் வலியுறுத்தியதால் விஜய் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.. நாளை கடலூர், தருமபுரியில் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்ட நிலையில் விஜய் நாளை திருச்சியில் பிரச்சாரம் செய்ய உள்ளார்..

அதே போல் நாளை மறு நாள் பெரம்பூரில் விஜய் பிரச்சாரம் செய்ய உள்ளார்.. அன்றைய தினம் பெரம்பூர், வில்லிவாக்கம் ஆகிய தொகுதிகளில் விஜய் வாக்கு சேகரிக்க உள்ளார்..

Source link