அத்துடன், இந்த தொகுதியில் கிறிஸ்தவர்கள் மற்றும் சிறுபான்மையினர் வாக்குகள் 50 சதவீதம் அளவுக்கு உள்ளதும் சாதகமாக இருக்கும் என்று தவெக கணக்கு போட்டு, தங்கள் தலைவரை அங்கே நிறுத்தி இருக்கிறது.
இங்கு நின்றால் விஜய், அதிக அளவில் நேரம் ஒதுக்கி பிரச்சாரம் செய்ய வேண்டி இருக்காது. ஒருநாள் ஒரு சுற்றி சுற்றினாலே போதுமானதாக இருக்கும் என்று தவெக 2-ம் கட்ட தலைவர்கள் விஜய்க்கு நம்பிக்கை அளித்துள்ளனர்.
அதனால், விஜய் தனக்காக அதிக நாட்கள் பிரச்சாரம் செய்யாமல் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்ய ஏதுவாக இருக்கும் என்று கருதியே திருச்சி கிழக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்கிறார்கள் தவெகவினர்.
