திருச்சி: தமிழக சட்டசபை தேர்தலில், மிகப்பெரிய பணக்கார வேட்பாளராக, அ.தி.மு.க., சார்பில், லால்குடி தொகுதியில்

திருச்சி: தமிழக சட்டசபை தேர்தலில், மிகப்பெரிய பணக்கார வேட்பாளராக, அ.தி.மு.க., சார்பில், லால்குடி தொகுதியில் போட்டியிடும் லீமா ரோஸ் உள்ளார்.

திருச்சி மாவட்டம், லால்குடி தொகுதியில் அ.தி.மு.க., சார்பில், பிரபல லாட்டரி வியாபாரி மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ் போட்டியிடுகிறார். இதுவரை இல்லாத அளவில், 164 பக்கங்கள் கொண்ட வேட்பு மனுவை, அவர் தாக்கல் செய்தார். அதில், அவரது சொத்துக்கள், அவரது கணவர் மற்றும் திருமணமாகாத மகன் ஆகியோர் பெயர்களில் உள்ள சொத்து விபரங்களை தெரிவித்துள்ளார்.

அதன்படி, 26.29 கோடி ரூபாய் தங்க நகைகள்; 15.48 கோடி ரூபாய் மதிப்பில் வைரம்; 3.29 கோடி ரூபாய் மதிப்பில் வெள்ளி; 1.84 கோடி ரூபாய் மதிப்பில் பிளாட்டினம் ஆகியவை தன்னிடம் உள்ளதாக தெரிவித்துள்ளார். நிலம், கட்டடங்கள் என, 909.94 கோடி ரூபாய்க்கு அசையா சொத்து; 139.62 கோடி ரூபாய்க்கு அசையும் சொத்து என, மொத்தம், 1,049.56 கோடி ரூபாய் மதிப்பில் சொத்து உள்ளதாக லீமா ரோஸ் தெரிவித்துள்ளார்.

இதுபோல, அவரது கணவர் மார்ட்டின் பெயரில், 3,262 கோடி ரூபாய்க்கு அசையா சொத்துக்கள்; 887.36 கோடி ரூபாய் மதிப்பில் அசையும் சொத்துக்கள் உள்ளதாகவும், மகன் ஜோஸ் டெய்சன் மார்ட்டின் பெயரில், 437 கோடி ரூபாய் அசையா சொத்துக்கள் உள்ளதாகவும், லீமா ரோஸ் தன் வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

லீமா ரோஸ், 1,049.56 கோடி ரூபாய் சொத்துக்கணக்கு காட்டி, இதுவரை இல்லாத அளவுக்கு, அதிக சொத்து கணக்கு காட்டிய வேட்பாளராகவும், இந்த தேர்தலின் பணக்கார வேட்பாளராகவும் உள்ளார்.

Source link