திருச்சி: திருச்சி கிழக்கு தொகுதியில் தவெக தலைவர் விஜய் ஏப்ரல் 2ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.
தவெக தலைவர் விஜய், சட்டசபை தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறார். பெரம்பூர் தொகுதியில் நேற்று வேட்புமனு தாக்கல் செய்த அவர், தேர்தல் பிரசாரத்தை துவக்கினார். கொளத்தூரில் நடந்த பிரசாரத்தின் போது விதிகளை மீறியதாக விஜய் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் நாளை மறுநாள் ஏப்ரல் 2ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். அன்றைய தினம் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். இதனையடுத்து பிரசாரம் மேற்கொள்ளும் இடங்களில் அனுமதி கேட்டு தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் தவெக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
விஜய் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகளை செங்கோட்டையன் மற்றும் கு.ப.கிருஷ்ணன் ஆகியோர் பார்வையிட்டனர்.
