திருச்சி: திருச்சி டி.வி.எஸ்., டோல்கேட் பகுதியைச் சேர்ந்த சுமங்கலி சம்பத். தொழிலதிபர். இவர் த.வெ.க.,வில் உள்ளார்.
திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடும் த.வெ.க., தலைவர் விஜய்க்கு ஆதரவாக, வாக்காளர்களுக்கு மூக்குத்திகள் வழங்கவுள்ளதாகவும், அவை, சுமங்கலி சம்பத் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும், தேர்தல் பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, தேர்தல் பறக்கும் படையினர், நேற்று மாலை, சுமங்கலி சம்பத் வீடு, அவரது நண்பர் வீட்டில், சோதனை நடத்தினர்.
