திருச்சி மணப்பாறை அருகே ஆம்னி பேருந்து சரக்கு வாகனம் மோது விபத்து: ஒருவர் உயிரிழப்பு – 40 பேர் படுகாயம் – one person dead 40 others critically injured omni bus accident near manapparai trichy on oct 26th

மணப்பாறையை அடுத்த வலசுப்பட்டி பிரிவு சாலை அருகே தனியார் ஆம்னி பேருந்து சென்று கொண்டிருந்த போது முன்னால் சென்று கொண்டிருந்த சரக்கு வேன் திடீரென பிரேக் பிடித்ததாக கூறப்படுகிறது. இதில் ஒருவர் உயிரிழந்ததாகவும், 40 பேர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

நள்ளிரவு விபத்து

மார்த்தாண்டத்தில் இருந்து 46 பயணிகளுடன் தனியார் ஆம்னி பேருந்து ஒன்று சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. நள்ளிரவு மதுரை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வலசுப்பட்டி பிரிவு சாலை அருகே சென்று கொண்டிருந்த போது முன்னால் சென்று கொண்டிருந்த சரக்கு வேன் திடீரென பிரேக் பிடித்ததாக கூறப்படுகிறது.

அலறி துடித்த பயணிகள்

இதனால் வேனின் பின் பகுதியில் பேருந்து மோதி உருக்குலைந்தது. இதனால் இடிபாடுகளுக்குள் சிக்கி பேருந்தில் இருந்தவர்கள் சப்தம் போடவே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு விரைந்தனர். மேலும் 15 க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் விரைந்து வந்து பேருந்தின் கண்ணாடியை உடைத்து அவசர கதவு வழியாகவும் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஒருவர் பலி

இதில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையத்தை சேர்ந்த பேருந்து உதவியாளர் சீராஜ் உசேன் (36) உயிரிழந்தார். மேலும் காயமடைந்த 40 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் விபத்து குறித்து தகவல் அறிந்து மணப்பாறை எம்.எல்.ஏ கதிரவன் அரசு மருத்துவமனைக்கு சென்று காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறியதுடன், கூடுதல் மருத்துவர்களை வரவழைத்து சிகிச்சை அளிக்க அறிவுறுத்தினார். இந்நிலையில் விபத்தில் சிக்கிய லாரியில் மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி இருந்தது. இருப்பினும் வேன் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

சரக்கு வாகனத்தில் ரேஷன் அரிசி?

மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி இருந்த நிலையில் அது கடத்தப்பட்ட ரேஷன் அரிசியாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வளநாடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் மதுரை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மீண்டும் விபத்து

இந்த நிலையில், அதே இடத்தில் மேலும் இரண்டு தனியார் ஆம்னி பேருந்துகள் மோதி விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு பேருந்தில் இருந்த சிலருக்கு காயம் ஏற்பட்டது. இந்நிலையில் விபத்து நடந்த இடத்தில் போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர்.

நள்ளிரவில் விபத்து நடந்தாலும் அங்கிருந்த ஆம்புலன்ஸ் குழுக்கள் மூலம் ஆம்புலன்ஸ் குழுவினர் மற்றும் 108 ஆம்புலன்ஸ்கள் விரைந்து வந்து செயல்பட்டு பொதுமக்கள் உதவியுடன் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்கு சேர்த்ததால் உயிரிழப்பு பெருமளவில் தவிர்க்கப்பட்டது.

Source link