திருச்சி: 2026 தமிழக சட்டசபை தேர்தலுக்கான நாம் தமிழர் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. காரைக்குடி தொகுதியில் சீமான் போட்டியிடுகிறார்.
திருச்சி அருகே ஆலம்பட்டி புதூரில் நாம் தமிழர் கட்சியின் மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு தொடங்கியது. மாநாட்டில் 2026 சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.
இந்த நிகழ்வில், 234 தொகுதிகளின் வேட்பாளர்களும் சீமானுடன் ஒரே மேடையேறினர். அவர்கள் அனைவரையும் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் அறிமுகப்படுத்தினார். வேட்பாளர்கள் பட்டியலில் சரிபாதி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது.
வேட்பாளர்கள்/ போட்டியிடும் தொகுதிகள் விவரம்;
ஆயிரம் விளக்கு – சோழன் மு. களஞ்சியம் (திரைப்பட இயக்குநர்)
வேதாரண்யம் – இடும்பாவனம் கார்த்திக்
சேப்பாக்கம் – ஆயிஷா பேகம்
காஞ்சிபுரம் – கி.ஆ,பெ. வெற்றிச்செல்வி(முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ. விஸ்வநாதன் பேத்தி)
மேட்டூர் – வித்யாராணி வீரப்பன் (சந்தனகடத்தல் வீரப்பன் மகள்)
உள்ளிட்ட பலரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த பட்டியலில் காரைக்குடி தொகுதியின் வேட்பாளராக சீமானின் பெயரும் இடம்பெற்று உள்ளது.
