திருச்செந்தூரில் கந்தசஷ்டி திருவிழா: பக்தர்கள் விரதமிருக்க 16 இடங்களில் கூடாரம் அமைக்க முடிவு

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா அடுத்த மாதம் (நவம்பர்) 10-ந் தேதி தொடங்கி 21-ந் தேதி வரை நடக்கிறது. நவம்பர் 15-ந் தேதி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹார விழாவில் 15 லட்சத்துக் கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நி லையில் திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்வது குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று கோவில் கலையரங்கத்தில் நடந் தது.தமிழக மீன்வளம் மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் விஷூ மகாஜன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத், கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் அருள்முருகன், இணை ஆணையர் அருணாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

493 கண்காணிப்பு கேமராக்கள்

கூட்டத்தில் பக்தர்களின் குடிநீர் தேவைக்காக கந்த சஷ்டி விழா நாட்களில் நக ராட்சி மற்றும் குடிநீர் வடிகால் வாரியம் மூலம் தினசரி 5 லட்சம் லிட்டர் குடிநீர் நகராட்சி பகுதி மற்றும் கோவில் வளாகத்தில் 30 இடங்களில் வழங்கப்படும் என் றும் தெரிவிக்கப்பட்டது. சுகாதாரப்பணிக்காக நகராட்சி சுகாதார பணியாளர்கள் 130 பேர், கோவில் சுகாதார பணியாளர்கள் 339 பேர் மற்றும் கூடுதலாக சிறப்பு பணியாளர்கள் 450 பேர் என மொத்தம் 919 பேர் பயன்படுத்தப்படுவார்கள்,

இவர்கள் மூலம் திருவிழா நாட்களில் உடனுக்குடன் குப்பைகள் அகற்றப்படும். சுகாதாரத்துறை சார்பில் கொசு மருந்து தெளிக்கப்படும் எனவும், கோவில் வளாகத்தில் 3 இடங்களில் மருத்துவக்குழுக்கள் செயல்படும். மேலும் 6 இடங்களில் ஆம்புலன்ஸ் வாகங்களும் தயார் நிலையில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட் டது. நகர் மற்றும் கோவில் பகுதியில் தீயணைப்பு வாகனங்கள் 4 நிறுத்தப்படும். பக் தர்களின் பாதுகாப்பிற்காக 493 இடங்களில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்க படுவார்கள்.

தற்காலிக கூடாரம்

கந்தசஷ்டி விரதமிருக்கும் பக்தர்களுக்கு கோவில் வளாகத்தில் 5 இடத்தில் நிரந்தர தங்குமிடங்கள் உள்ளன. மேலும் கூடுதலாக 11 இடங்களில் தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்படும். இதேபோல் 325 நிரந்த கழிப்பறை உள்ளது, கூடுதலாக 300 தற்காலிக கழிப்பறைகள் வசதி செய்யப்படும். திருவிழா நாட்களில் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என்பது குறித்த பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.

Source link