தேர்தல் பிரச்சாரத்தில் கையில் வேலுடன் உணர்ச்சி பொங்க அருணகிரிநாதரின் திருப்புகழைப் பாடிய வேலூர் இப்ராஹிம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
திருச்செந்தூர் தொகுதி பாஜக வேட்பாளர் கே ஆர் எம் ராதாகிருஷ்ணனை ஆதரித்து ஆத்தூரில் பிரச்சாரம் மேற்கொண்ட பாஜக சிறுபான்மை தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் அருணகிரிநாதர் அருளிய முதல் திருப்புகழ் பாடலை பாடி அனைவரையும் வியக்க வைத்தார். ஆத்தூர் பஜாரில் பிரச்சாரம் மேற்கொண்ட அவருக்கு வேறொன்று பரிசாக வழங்கப்பட்டது. அதைக் கையில் ஏந்தி வேலூர் இப்ராகிம் அவர்கள் திருப்புகழைப் பாடினார்.
