திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம்

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணியசுவாமி கோவில் சிறந்த பரிகார ஸ்தலமாக விளங்கி வருகிறது. கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது.

இன்று முருகனை வழிபட உகந்த நாளாக கருதப்படும் வளர்பிறை சஷ்டி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். கோவில் கடல் மற்றும் நாழிக்கு நெருப்பு புனித தீர்த்தத்தில் நீராடி சுமார் ஆறு மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் கோவில் வளாகத்தில் பக்தர்கள் கூட்டமாக காணப்பட்டது.

கோவிலில் முடி காணிக்கை செலுத்தவும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடவும் பக்தர்கள் நீண்ட வரிசையில் சுமார் இரண்டு மணி நேரம் காத்திருந்தனர்.

Source link