‘திருநெல்வேலியில் கூட்டம் நடத்தும் விஜய்; வருத்தத்தில் தவெக நிர்வாகிகள்!’ – காரணம் என்ன? |Why Are Vijay’s Tirunelveli Rally Plans Causing Discontent Among TVK Leaders?

இன்ஸ்டாகிராமில் கூட சில இளைஞர்கள் வீடியோ போட்டிருந்தார்கள். அவர்களுக்கு சொல்லப்பட்ட தகவல்கள் கூட எங்களுக்கு சொல்லப்படவில்லை . எல்லா தகவல்களும் திருநெல்வேலி வேட்பாளர் ஆர்.எஸ்.முருகனுக்கும் பாளை வேட்பாளர் மரிய ஜானுக்கு மட்டுமே சொல்லப்பட்டிருப்பதாக கூறுகிறார்கள். ஆனால், அவர்கள் தரப்பிலிருந்து எந்த மா.செக்கும் மற்ற வேட்பாளர்களுக்கும் அழைப்போ தகவலோ செல்லவே இல்லை. ஆர்.எஸ்.முருகன் மார்ச் 28 ஆம் தேதிதான் கட்சிக்கே வந்தார்.

மரிய ஜான்

மரிய ஜான்

மரிய ஜான் ஒரு வருடம் முன்பாக பதவியை குறிவைத்து மட்டுமே கட்சிக்குள் வந்தவர். இருவருமே பணம் படைத்தவர்கள். அதனால் அவர்களாகவே கைகோத்து கொண்டு எல்லாவற்றையும் செய்கிறார்கள். ஏற்பாடுகளை மேற்பார்வையிட செங்கோட்டையன் திருநெல்வேலி வந்திருக்கிறார். அந்தத் தகவலையும் எங்களிடம் சொல்லவில்லை. ‘உழைத்தவர்களுக்குதான் பதவி, மற்றபடி ஹெலிகாப்டரில் வந்தால் கூட இங்கே பதவி கிடைக்காது’ என்றனர். எல்லாமே வாய் வார்த்தையாகத்தான் இருக்கிறது. கண்முன்னே சீட்டுக்காகவும் பதவிக்காகவும் கட்சிக்குள் வந்தவர்களுக்கு எல்லா முக்கியத்துவமும் கிடைக்கிறதே. நாங்கள் அழையா விருந்தாளியை போல கையறு நிலையில் நிற்கிறோம்’ என்றனர்.

தென்மாவட்ட நிர்வாகிகளின் குமுறலை தவெக தலைமை கவனிக்குமா?

Source link