நமது நிருபர்
திருநெல்வேலியில் 3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த குற்றவாளி ஆனந்த சேகருக்கு மரண தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்து உத்தரவிட்டது.
திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையத்தைச் சேர்ந்தவர் ஆனந்த் சேகர். இவருக்கு வயது 40. இவர் கடந்த 2023ல் மேலப்பாளையத்தில் ஒரே நேரத்தில் 3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து சிறுமிகளின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.
விசாரணையில் சிறுமிகளிடம் ஆனந்த் சேகர் அத்துமீறி பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து ஆனந்த் சேகரை கைது செய்த போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. அனைத்து விசாரணைகளும் முடிந்த நிலையில் இன்று குற்றவாளி ஆனந்த சேகருக்கு மரண தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
