திருநெல்வேலி: சர்ச் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தில் முதியவர் ஒருவர் மாரடைப்பால்

திருநெல்வேலி: சர்ச் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தில் முதியவர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்தார். மேலும் 3 பெண்கள் மயக்கம் அடைந்தனர்.

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே மேல ஏறாந்தை கிராமத்தில் பெரும்பான்மையாக ஹிந்துக்கள் வசித்து வருகின்றனர். கிராமத்தில் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய ஒருவர் புதிதாக சி.எஸ்.ஐ., தேவாலயம்கட்ட முயற்சி நடந்தது. வணிக வளாகம் கட்டுவதற்கான அனுமதி பெற்று, அதை தேவாலயமாக மாற்ற முயற்சித்ததாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

இதுகுறித்து கடந்த சில மாதங்களாக கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மாவட்ட வருவாய் அலுவலர், தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு அளித்து உள்ளனர். அதிகாரிகள் தேவாலயம் கட்ட அனுமதி இல்லை என கூறினர்.

இந்நிலையில், இன்று மீண்டும் கட்டுமானப் பணிகள் துவங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் உச்சிமாகாளி அம்மன் கோவில் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்தில் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டனர். போராட்டக்காரர்களுக்கு குடிநீர், உணவு கொண்டு செல்ல போலீசார் அனுமதி மறுத்தனர்.

போராட்டத்தில் கலந்து கொண்ட மணிவேல் (65) திடீரென மயங்கி விழுந்தார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். உடனடியாக ஆம்புலன்ஸில் கொண்டு செல்ல முடியாததால் சிகிச்சை தாமதமாகி உயிரிழந்ததாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட நாகவள்ளி (50), செல்லத்தங்கம் (60), உமா (35) ஆகிய 3 பெண்கள் திடீரென மயக்கமடைந்தனர்.

இறந்தவரின் உடலை வாங்க மறுத்து பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் கைது செய்யப்பட்டு திசையன் வழியில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்து தங்க வைக்கப்பட்டனர். இதனால் கிராமத்தில் பதற்ற நிலை நிலவுகிறது. போலீசார் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Source link