திருநெல்வேலி: தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி எங்கே இருக்கிறது என்பது யாருக்கும் தெரியவில்லை என தமிழக பாஜ தலைவர்

திருநெல்வேலி: தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி எங்கே இருக்கிறது என்பது யாருக்கும் தெரியவில்லை என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

திருநெல்வேலி தொகுதியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட நயினார் நாகேந்திரன் பேசியதாவது: நான் சாத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறேன். திருநெல்வேலி தொகுதியில் செய்ய வேண்டிய அனைத்தையும் நாம் செய்து முடித்துவிட்டோம். எனவே, திமுக வேட்பாளருக்கு செய்ய எதுவும் இல்லை.

இந்த தொகுதி அதிமுகவின் கோட்டை. பிரதமர் மோடி தமிழகத்திற்கு ரூ.14 லட்சம் கோடி நிதி உதவி வழங்கியுள்ளார். நாட்டின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆனால் காங்கிரஸ் கூட்டணியில் இருந்த திமுக முன்னாள்அமைச்சர்கள் தமிழகத்திற்கு எந்த திட்டங்களையும் கொண்டு வரவில்லை.

வருத்தத்திற்குரியது

தமிழகத்தில் காங்கிரஸ் எங்கே உள்ளது என்பது யாருக்கும் தெரியவில்லை. அவர்கள் கூட்டணியில் உள்ளதாக மட்டும் கூறிக்கொள்கிறார்கள். விஜயுடன் இணைந்து இருப்பதாக கூறினால், அதைப் பற்றி அவரிடமே கேட்க வேண்டும்.

ஆலங்குளத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் வருத்தத்திற்குரியது; வன்மையாக கண்டிக்கத்தக்கது. போலீசாருக்கு என்ன செய்ய வேண்டும் என்பது தெரியாமல் உள்ளது. சட்டம்-ஒழுங்கை எப்படி கட்டுப்படுத்துவது என்பதையும் முதல்வர் அறியவில்லை.

அவதூறு

கட்டுப்பாடு இல்லாத ஆட்சி நடைபெற்று வருகிறது. பிரதமரை அவதூறாக பேசுபவர்களை நடவடிக்கை எடுக்காமல் விடுகின்றனர். ஆனால் முதல்வரை விமர்சிப்பவர்களை கைது செய்கிறார்கள். கன்னியாகுமரி கலெக்டர் அழகு மீனா திமுகவுக்கு ஆதரவாக செயல்படுகிறார்.

சாத்தூர் டிஎஸ்பியும் எங்களுக்கு எதிராக செயல்படுகிறார். அதிமுக வெளியிட்ட அறிக்கையைப் பார்த்து திமுக அதையே பின்பற்றி அறிக்கை வெளியிட்டு வருகிறது. இவ்வாறு நயினார் நாகேந்திரன் பேசினார்.

Source link