திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு! – tirunelveli school leave announcement schools closed today october 22

நெல்லை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், மாணவர்களின் பாதுகாப்பு கருதி பள்ளிகளுக்கு மட்டும் இன்று மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் விடுமுறை அளித்துள்ளார்.

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், நெல்லை மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இன்று (22-10-2026) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நேற்று இரவு முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விடிய விடியக் கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கும் சூழல் ஏற்பட்டுள்ளதுடன், காலையில் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாக நேரிட்டது.

ஆட்சியர் ஆனந்த் மோகன் அதிரடி அறிவிப்பு:

மாவட்டம் முழுவதும் தொடர்ந்து பெய்து வரும் இந்தத் தீவிரக் கனமழையைக் கருத்தில் கொண்டும், பள்ளிச் செல்லும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கிலும் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நெல்லை மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், கனமழை காரணமாக நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (வியாழக்கிழமை) ஒருநாள் விடுமுறை அளிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும்:

இந்த விடுமுறை அறிவிப்பானது பள்ளிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், கல்லூரிகள் மற்றும் இதர கல்வி நிறுவனங்கள் வழக்கம்போல் இயங்கும் என்றும் மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மழையின் தீவிரத்தைப் பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Source link