திருப்பூர் ஏற்றுமதி அமெரிக்க வர்த்தக ஒப்பந்த அறிவிப்பால் பாதிப்பிலிருந்து தப்பிய சிறு நிறுவனங்கள்

திருப்பூர்: ஐரோப்பிய யூனியன் மற்றும் பிரிட்டன் நாடுகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் உருவாகி உள்ளது. அமெரிக்க வரி உயர்வு விவகாரமும், சுமுகமாக முடிந்துள்ளது. இதனால் கூடுதல் வாய்ப்புகள் உருவாகும் என, தி ருப்பூரை சேர்ந்த குறு, சிறு ஏற்றுமதி யாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் சிறு, குறு ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்கள், கடந்த, 20 ஆண்டுகளாக, ஐரோப்பிய சந்தையை சார்ந்து இயங்கினர். நடுத்தர மற்றும் பெரிய நிறுவனங்கள், அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்து வந்தன.

அமெரிக்காவில், இந்திய பொருட்களுக்கான இறக்குமதி வரி உயர்த்தப்பட்டது கடும் சவாலாக மாறியது. வரி உடன்பாடு ஏற்படாத பட்சத்தில், மாற்று சந்தையை நாடலாம் என, பெரிய ஏற்றுமதி நிறுவனங்கள் திட்டமிட்டன. அதற்கு சாதகமாக, ஐரோப்பிய யூனியனுடன், தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது.

இருப்பினும், இதனால் ஐரோப்பிய யூனியனுடன் வர்த்தகம் செய்து வரும் சிறு, குறு, ஏற்றுமதியாளர்களின் வாய்ப்புகள் பாதிக்கும் என்ற அச்சமும் உருவானது. திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கமான ‘டீமா’வின் பொது செயலர் செந்தில்வேல் கூறுகையில், ”அமெரிக்க சந்தையை இழக்க நேரிட்டால், ஏற்றுமதியாளர்கள் ஐரோப்பிய யூனியன் சந்தைக்கு மாறியிருப்பர்.

” இதனால் சிறு, குறு ஏற்றுமதியாளர் நிலை படுமோசமாகியிருக்கும். அதிர்ஷ்டவசமாக, அமெரிக்க வரி உயர்வில் தீர்வு கிடைத்துள்ளதால், பெரிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள், அமெரிக்காவுடன் வர்த்தகத்தை தொடர தயாராகி விட்டனர்.

” ஐரோப்பிய ஒப்பந்தம் வாயிலாக, வரிச்சலுகை கிடைத்த பின், இந்திய சிறு, குறு ஏற்று மதியாளர்கள் அதிகம் பயன்பெறுவர்,” என் றார்.

Source link