திருப்பூர் பெண் பலாத்கார வழக்கில் இருவர் கைது; பாதிக்கப்பட்ட மேலும் 19 பெண்கள் போலீசில் புகார்

பெங்களூரு: திருப்பூர் பெண் கூட்டு பலாத்கார வழக்கில், காதலன் உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். ‘நாங்களும் பாதிக்கப்பட்டவர்கள்’ என மேலும், 19 பெண்கள் போலீசில் புகார் அளித்து உள்ளனர்.

சமூக வலைதளம் தமிழகத்தின் திருப் பூரைச் சேர்ந்த 19 வயது இளம்பெண், கர்நாடக மாநிலம் பெங்களூரு ராஜாஜிநகரில் தங்கி கல்லுாரி ஒன்றில் பி.ஏ., முதலாம் ஆண்டு படிக்கிறார்.

இவருக்கும், மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவரும், பெங்களூரு பசவேஸ்வராநகரில் வசித்தவருமான டிக்சன் சான்ட்ரோவுக்கும், 21, சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டது.

கடந்த 14ம் தேதி காதலர் தினத்தன்று மாணவியை, ஜக்கூரில் உள்ள வில்லாவுக்கு டிக்சன் அழைத்து சென்றார். அங்கு மாணவிக்கு போதை மாத்திரை கொடுத்து, டிக்சனும், அவரது நண்பர் நிகிலும், 35, கூட்டு பலாத்காரம் செய்தனர்.

இதுபற்றி, டிக்சன் மற்றும் நிகில் மீது அம்ருதஹள்ளி போலீசில் மாணவி 21ம் தேதி புகார் செய்தார். இதையடுத்து, தலைமறைவாக இருந்த இருவரையும், அம்ருதஹள்ளி போலீசார் நேற்று முன்தி னம் கைது செய்தனர்.

அதேநேரத்தில், கைதானவர்கள் மீது அம்ருதஹள்ளி போலீஸ் நிலையத்தில் மேலும், 19 இளம்பெண்கள் புகார் அளித்துள்ளனர்.

கைதானவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை குறித்து போலீசார் கூறியதாவது:

டிக்சனும், நிகிலும், பெங்களூரில் உள்ள பிரபல கல்லுாரிகளில் படிக்கும் வெளிமாநில மாணவியரை குறிவைத்து உள்ளனர். சமூக வலை தளங்கள் மூலம் மாணவியர் அறிமுகமான பின், நேரில் சந்தித்து பேசுவர்.

சிறிது நாட்கள் கழித்து பார்ட்டிக்கு செல்லலாம் என்று, அம்ருதஹள்ளியில் உள்ள வில்லாவுக்கு அழைத்துச் செல்வர். அங்கு சென்றதும் போதை பொருட்களை எடுத்து பெண்களிடம் கொடுப்பர். அதை வாங்கி உட்கொள்ளும் பெண்களிடம் உல்லாசமாக இருக்கலாமா என்று கேட்பர். சம்மதிக்கும் பெண்களுடன் உல்லாசமாக இருந்துள்ளனர்.

மிரட்டல் மறுக்கும் பெண்களின் வாயில் வலுக்கட்டாயமாக, போதை மாத்திரையை போட்டு, அவர்களை மயக்கம் அடைய வைத்து கூட்டு பலாத்காரம் செய்து அதை மொபைல் போனில் வீடியோ எடுத்துள்ளனர்.

அந்த வீடியோவை காட்டி மிரட்டியும் வந்துள்ளனர். கார் விற்பனை டீலரான நிகிலுக்கு, முக்கிய அரசியல் பிரமுகர்களின் தொடர்பு இருந்துள்ளது. மேலும், திருப்பூர் பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட வில்லா, கர்நாடகாவில் பணியாற்றும் ஐ.பி.எஸ்., அதிகாரி ஒருவருக்கு சொந்தமானது என தெரிகிறது.

இவ்வாறு போலீசார் கூறினர்.

Source link