இந்நிலையில், பொது சொத்துக்களான சாலைகள் அழிக்கப்படுவதைத் தடுக்கத் தவறியதால் நாங்களே குற்றவாளிகள் எனக்கூறி பெருந்தொழுவு, நாச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் திருப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைய முயன்றனர்.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாகப் புறப்பட்ட 80 பேரை திருப்பூர் தெற்கு போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
பின்னர் தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இந்த சம்பவம் காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
