திருமணத்திற்கு மறுத்த காதலன்.. காதலியை பைக்கில் இழுத்துச் சென்ற கொடூரம்- பீகார் வைரல் வீடியோ – bihar man drags girlfriend on bike video viral

இருச்சக்கர வாகனத்தில் இளம்பெண்ணை பைக்கில் இழுத்து செல்லும் வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பீகார் மாநிலம் நலாந்தா மாவட்டத்தில் திருமண விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில், காதலியை வாலிபர் ஒருவர் பைக்கில் சுமார் 100 மீட்டர் தூரம் இழுத்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

சம்பவத்தின் பின்னணி

பீகார் மாநிலத்தின் நவாடா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜ்கிரைச்.இவருக்கு வயது 28. இவர் நவாடா மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகம் ஒன்றில் நில அளவையாளராக (Survey Officer) பணியாற்றி வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண்ணும் நீண்ட ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் அடிக்கடி சந்தித்து வந்துள்ளனர்.

திமுக பாஜக கூட்டணியா?நெருக்கடியில் திமுக? காரணம் இதுதானா?

இந்த நிலையில், காதலித்த பெண்ணுக்கு அந்த வாலிபரை திருமணம் செய்துகொள்ள விருப்பம் இருந்துள்ளது. இதுகுறித்து பேசுவதற்காக அந்தப் பெண், தனது காதலனைச் சந்திக்கச் சென்றுள்ளார். அப்போது, தன்னை விரைவில் திருமணம் செய்துகொள்ளுமாறு வாலிபரிடம் வற்புறுத்தியுள்ளார். ஆனால், அந்த இளைஞர் திருமணத்திற்கு தொடர்ந்து மறுப்பு தெரிவித்ததால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

100 மீட்டர் இழுத்துச் செல்லப்பட்ட பெண்

வாக்குவாதம் முற்றிய நிலையில், அந்த வாலிபர் அங்கிருந்து கிளம்புவதற்காகத் தனது இருசக்கர வாகனத்தை ஸ்டார்ட் செய்துள்ளார். அவரைத் தடுக்க நினைத்த காதலி, ஓடும் பைக்கின் பின்புறத்தை பிடித்துக் கொண்டு நிறுத்த முயன்றுள்ளார். ஆனால், அதைப்பற்றி சிறிதும் கவலைப்படாத அந்த இளைஞர், பைக்கை நிறுத்தாமல் வேகமாக ஓட்டியுள்ளார்.

இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த அந்தப் பெண், பைக்கைப் பிடித்தபடியே சாலையில் சுமார் 100 மீட்டர் தூரம் வரை கொடூரமாக இழுத்துச் செல்லப்பட்டார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், “பைக்கை நிறுத்து” என்று கத்திக்கொண்டே வாலிபரைப் பின்தொடர்ந்து ஓடினர்.

வாலிபருக்குத் தர்மஅடி

சிறிது தூரம் சென்றதும் நிலைதடுமாறி பைக் கீழே கவிழ்ந்தது. இதில் இருவருமே கீழே விழுந்தனர். உடனடியாக ஓடிவந்த உள்ளூர் மக்கள், காயமடைந்த பெண்ணை மீட்டு, அந்த வாலிபரைப் பிடித்துத் தர்மஅடி கொடுத்தனர். விசாரணையின் போது இது எங்கள் குடும்பப் பிரச்சினை, இவர் என் மனைவி” என்று கூறி தப்பிக்க அந்த வாலிபர் முயன்றுள்ளார்.
ஆனால், அந்தப் பெண் தனக்கு நேர்ந்த கொடூரம் குறித்துக் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள ராஜ்கிர் காவல்துறையினர், தலைமறைவாக உள்ள வாலிபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி, மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Source link