திருவண்ணாமலை கோயிலில் நுழைந்த அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவின் மாற்று மத உதவியாளர் அமைச்சருடன் ஆய்வுக்கு சென்றது சர்ச்சையானது. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையில் உயர்நீதி மன்றக் கிளை கருத்து தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலை கோயிலில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் அமைச்சர் சீ. ரமேஷ் ஆகியோர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் உதவியாளர் மாற்று மதத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவர் தொப்பி அணிய எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து அவர், தொப்பியைக் கழற்றிவிட்டு ஆய்வில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுடன் பங்கேற்றார். இந்த சூழலில் இதுகுறித்த வழக்கு விசாரணை மதுரை உயர்நீதி மன்றக் கிளையில் நடைபெற்றதில், இஸ்லாமியர் ஒருவர் அவரின், மத அடையாளங்களுடன் உள்ளே சென்றுள்ளார். இதனை ஏற்றுக் கொள்ள முடியாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. .
உயர்நீதி மன்ற கிளை கருத்து
திருவணணாமலை கோயிலில் இஸ்லாமியர் ஒருவர் அவரின், மத அடையாளங்களுடன் உள்ளே சென்றுள்ளார். இதனை ஏற்றுக் கொள்ள முடியாது என இந்த வழக்கு விசாரணையில் உயர்நீதி மன்றக் கிளை தெரிவிஹ்துள்ளது. அதனைத் தொடர்ந்து பிற மதத்தினர் கோயில் உள்ளே செல்லும் போது உரிய விதிகள் கண்டிப்பாக கடைபிடிக்கப்படும் என அரசுத் தரப்பு அளித்த உறுதிமொழியை ஏற்று, வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.
அமைச்சர்கள் ஆய்வு
திருக்கார்த்திகை தீபத் திருவிழா ஆலோசனைக் கூட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக திருவண்ணாமலை மாவட்ட பொறுப்பு அமைச்சரும் தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சருமான ஆதவ் அர்ஜுனா மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் ஆகியோர் அண்ணாமலையார் கோயிலில் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தனர். அப்போது அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவின் உதவியாளர் இஸ்லாமியர் என்பதால் தனது மத அடையாளத்துடன் கோயிலில் உள் சென்றுள்ளார். அதற்கு அங்கிருந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து அவர் தொப்பியை கழட்டிவிட்டு அமைச்சருடன் ஆய்வு மேற் கொண்டார்.
பாஜகவினர் கண்டனம்
திருவண்ணாமலை கோயிலில் தங்கள் மத அடையாளமான தொப்பி அணிந்த இஸ்லாமியரை அழைத்துச் சென்ற இந்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆகியோரை வன்மையாகக் கண்டிக்கிறேன் என பாஜகவினர் பலர் அறிக்கை வெளியிட்டனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு
சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி (30 ஜனவரி 2024) கொடிமரம்/துவஜஸ்தம்பம் தாண்டி இந்துக்கள் அல்லாதவர்களுக்கு நுழைய அனுமதி இல்லை. ஒரு வேளை, இந்து அல்லாத ஒருவர் வழிபட விரும்பினால், தனக்கு அந்தக் கடவுளின் மீது முழு நம்பிக்கை இருப்பதாகவும், இந்து கலாச்சாரம் மற்றும் கோவிலின் விதிகளைப் பின்பற்றுவதாகவும் எழுத்துப்பூர்வமாகத் தெரிவிப்பதோடு அந்தக் கோவிலின் பதிவேட்டில் பதிய வேண்டும் எனத் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
நாராயணன் திருப்பதி கேள்வி
இந்த தீர்ப்பை சுட்டிக்காட்டி பாஜக தலைமைச் செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதில்ல், அந்த இஸ்லாமியர் சட்டப்படி இந்து கடவுளை ஏற்றுக்கொள்கிறேன் என்ற உறுதிமொழியை எழுதிக் கொடுத்தாரா? இதே போன்று மற்ற வழிபாட்டுத் தளங்களில் நடைபெற்றால் அந்த விதிகளை மீறுவார்களா அமைச்சர்கள்? ஐயோ சிறுபான்மை மக்களின் உரிமைகளைப் பறிக்கிறார்களே என்று பொங்கியெழுவார்களே தமிழக அரசியல்வாதிகள்? சட்டத்தை மதிக்காத அமைச்சர்கள் எப்படி சட்டத்தை அமல்படுத்துவார்கள்? விமர்சிதிருந்தார்.
Source link
