திருவனந்தபுரம்: கேரள தேர்தல் களத்தில், உலக தலைவர்கள் பிரசாரம் செய்வது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி

திருவனந்தபுரம்: கேரள தேர்தல் களத்தில், உலக தலைவர்கள் பிரசாரம் செய்வது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி பலரின் வரவேற்பை பெற்றுள்ளது.

கேரள சட்டசபைக்கு ஏப்ரல் 9 ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு தேர்தல் பிரசாரம் களைகட்டி உள்ளது. தலைவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டம், பேரணி மற்றும் வேட்பாளர்கள் வீடு, வீடாக சென்று பிரசாரம் செய்து வருகின்றனர்.

அதேபோல், இணையம், நவீன தொழில்நுட்பங்கள் மூலம் பிரசாரம் செய்து வருகின்றனர். உலகம் முழுவதும் இளம்தலைமுறையினரின் கவனத்தை பெற்றுள்ள ஏஐ தொழில்நுட்பம் கேரள தேர்தல் களத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

அதிலும், இந்திய தலைவர்கள் மட்டும் அல்லாமல், உலக தலைவர்களும் கேரளாவிற்கு வந்து பிரசாரத்தில் ஈடுபடுவது போன்ற ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

குறிப்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் பாஜவுக்கு ஆதரவாகவும், இஸ்ரேல் ரஷ்ய அதிபர் புடின், சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோர் மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஆதரவாகவும் பிரசாரம் செய்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. வட கொரியா அதிபர் கிம்ஜான் உங், இஸ்ரேல் அதிபர் நெதன்யாகு, பிரான்ஸ் அதிபர் மேக்ரான், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆகியோரும் பிரசாரம் செய்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அவர்கள் வீதி வீதியாகவும், மீன்கடையிலும் ஓட்டு சேகரிப்பது போலவும், பொதுக்கூட்டங்களில் பேசுவது போன்ற காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

Source link