திருவனந்தபுரம்: ”நான் வீழ்ந்து விடுவேனோ என அச்சமடைந்த போது என்னை துாக்கிப் பிடித்து பிடித்தவர்கள் மலையாளிகள்” என ராகுல் எம்.பி., உருக்கமாக பேசினார்.
கேரளமாநிலம் பத்தனம்திட்டாவில் நடந்த காங்., தேர்தல் பிரசார கூட்டத்தில் அவர் பேசியதாவது:
ஐந்து ஆண்டுகள் கேரளாவில் எம்.பி.,யாக இருந்திருக்கிறேன். நான் ஒரு மலையாளி என்று சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்கிறேன்.
எனது தாயார் உடல்நலம் குன்றியிருக்கும் நிலையில் அவரிடமிருந்துதான் உங்களை சந்திக்க வந்துள்ளேன். அவரை கேரளாவை சேர்ந்த மலையாள செவிலியர்கள் உடனிருந்து கவனித்து வருகிறார்கள். அதனால் தான் நான் உங்களுடன் இங்கு பேசிக் கொண்டிருக்கிறேன்.
வேறு யாரிடமும் இத்தகைய அன்பும் நேர்மையும் இல்லை. எனது நெருக்கடியான தருணங்களில் நான் வீழ்ந்து விடுவேனோ என்று உணர்ந்த நேரங்களில் மலையாளிகள் தான் எனக்கு துணையாக நின்றார்கள். என்னை ஆதரித்து மீட்டெடுத்தார்கள். நான் அவர்களுக்கு மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். அது குறித்து எவ்வளவு பேசினாலும் போதாது.
இவ்வாறு அவர் கூறினார்
