இன்று அதிகாலை 5.30 மணியளவில் விநாயகர், முருகன் ஆகிய தேர்கள் நான்கு வீதிகளிலும் வலம் வந்த, பின்னர் சரியாக 9:05மணிக்கு ஆழி தேரோட்டம் தொடங்கியது. பக்தர்கள் “ஆரூரா தியாகேசா” என முழக்கங்கள் எழுப்பி தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனர். ஆழித்தேர் அசைந்து வரும் காட்சியை பல்லாயிரக்கணக்கானோர் கண்டு பக்தி பரவசம் அடைந்தனர்.
இந்த தேரோட்ட விழாவை முன்னிட்டு திருவாரூர் எஸ்பி கருண் கரட் தலைமையில் 1,500 மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல ஆங்காங்கே சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. குறிப்பாக தீயணைப்பு வாகனம், ஆம்புலன்ஸ், மருத்துவ குழுவினர் தயார் நிலையில் 4 வீதிகளிலும் நிறுத்தப்பட்டுள்ளனர். நகராட்சி சார்பில் குடிநீர் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.
