பதவிக்காக நான் யார் காலில் விழும் அனுபவம் எனக்கு கிடையாது, ஆனால் பழனிசாமி பதவிக்காக ஜெயலலிதா, சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோரது காலில் விழுந்து, பின்னர் அவர்களது காலையும் வாரி விட்டவர். தற்போது மோடியின் காலை பிடித்து தொங்கிக் கொண்டிருக்கிறார். தமிழகத்தை ஆள எடப்பாடி பழனிசாமியை பாஜக ஒரு ரிமோட்டாக மாற்றி வருகிறது.
இந்த முறை டெல்லி அணிக்கும் தமிழகத்துக்கும் நடைபெறும் தேர்தலில் நாம் வெற்றி பெற வேண்டும். அதற்கு இன்னும் 16 நாட்கள் தான் உள்ளன. இதில் ஒவ்வொருவரும் அவரவர் பகுதிக்கு சென்று தங்களிடம் தெரிந்தவரிடம் திமுக கூட்டணிக்கு வாக்கு சேகரித்து திருவையாறு தொகுதியில் துரை.சந்திரசேகரனை வெற்றி பெறச் செய்தால் நீங்கள் கேட்டது போல் அவரை அமைச்சராக்க தலைவரிடம் எடுத்துக் கூறுவேன்” என்று உதயநிதி கூறினார்.
