திருவொற்றியூர் முதல் எண்ணூர் வரை தயார் நிலையில் படகுகள்: சென்னையில் என்ன நடக்கிறது? – chennai red alert for 1000 firefighters on standby for flood rescue

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. சென்னையில் நேற்று இரவு ஒரே நாளில் சுமார் தி. நகர், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், மீனப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு 36 செ.மீ.க்கும் மேல் அதிகமாக மழை பெய்துள்ளது. இந்த நிலையில், கனமழையை எதிர்கொள்ளும் வகையில் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

சென்னை மக்கள் பயப்பட வேணாம்…பக்காவாக ரெடி ஆகும் தவெக அரசு!

சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை

குறிப்பாக, வெளி மாவட்டங்களில் இருந்து கூடுதல் தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு வாகனங்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டுள்ளன.

ஏற்கெனவே சென்னையில் பணியில் உள்ள வீரர்களுடன், வெளி மாவட்டங்களில் இருந்து வருகை தரும் வீரர்களையும் சேர்த்து, சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் சுமார் 1,000 பேர் பாதுகாப்பு மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபடத் தயார் நிலையில் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

வடசென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழையால் சாலைகளில் வெள்ளநீர் தேங்கும் சூழல் ஏற்பட்டால், பொதுமக்களைப் பாதுகாப்பாக மீட்பதற்காக முக்கியப் பிரதான சாலைகள் மற்றும் பாதிப்புக்குள்ளாகக்கூடிய பகுதிகளில் படகுகளுடன் தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

வடசென்னையில் தயார் நிலையில் மீட்புக் குழுக்கள்

திருவொற்றியூர்: கார்கில் நகர் 7-வது பிரிவு மற்றும் 11-வது வார்டு பகுதிகளில் படகுகளுடன் கூடிய தண்ணீர் டேங்கர் வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன. சாத்தாங்காடு – மணலி: மணலி தீயணைப்பு நிலையத்தின் சார்பில் படகுடன் கூடிய தண்ணீர் டேங்கர் வாகனம் தயார் நிலையில் உள்ளது. பாரிஸ் – பிராட்வே: 60-வது வார்டு எஸ்பிளனேடு பகுதியில் படகுடன் கூடிய தண்ணீர் பவுசர் வாகனம் நிறுத்தப்பட்டுள்ளது. கத்திவாக்கம் – எண்ணூர்: 2-வது வார்டு கத்திவாக்கம் மற்றும் 3-வது வார்டு எண்ணூர் பகுதிகளில் படகுகளுடன் கூடிய தண்ணீர் டேங்கர் வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன. மணலி புதுநகர்: 15 மற்றும் 18-வது வார்டுகளில் ரப்பர் படகு, உயிர்காக்கும் உடைகள், கயிறுகள், ஹோண்டா பம்ப், பவர் சா உள்ளிட்ட மீட்புக் கருவிகளுடன் வாகனம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மாதவரம்: 30-வது வார்டு பகுதியில் படகுடன் கூடிய தண்ணீர் டேங்கர் வாகனம் தயார் நிலையில் உள்ளது. மணலி – ஜிஎன்டி சாலை: ரெட்ஹில்ஸ் ஜிஎன்டி சாலையில் உள்ள நெல் அரசு மொத்த விற்பனை வளாகம் அருகே, அம்பத்தூர் ட்ரூப் கேரியர் வாகனத்துடன் ரப்பர் படகு, உயிர்காக்கும் உடைகள், கயிறுகள் உள்ளிட்ட மீட்புக் கருவிகள் தயார் நிலையில் உள்ளன. காசிமேடு: ரப்பர் படகுகளுடன் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் தயார் நிலையில் உள்ளனர்.

பிரதான சாலைகளில் படகுகளுடன் மீட்புப் படையினர்

கனமழையின் தாக்கத்தால் சாலைகளில் வெள்ளநீர் தேங்கினால், பொதுமக்களை உடனடியாக மீட்பதற்கும், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விரைந்து சென்று உதவுவதற்கும் இந்த முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சுமார் 1,000 பேர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடத் தயார் நிலையில் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், மழையின் தீவிரம் அதிகரித்தால் உடனடியாக மீட்புப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் வீரர்களும், வாகனங்களும், மீட்பு உபகரணங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும்; வெள்ளம் தேங்கிய சாலைகளில் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்படுகின்றனர்.

Source link