தி.மு.க., அழிய வேண்டும் என நினைத்தவர்கள் அழிந்து விட்டனர்: நடிகர் வடிவேலு

சென்னை: ”தி.மு.க., அழிய வேண்டும் என நினைத்த பலர் அழிந்து விட்டனர்,” என நடிகர் வடிவேலு பேசினார்.

சென்னை கொளத்துாரில் நடந்த தி.மு.க., கூட்டத்தில், அமைச்சர் சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா, நடிகர்கள் வடிவேலு, நாசர் உள்ளிட்ட திரைபிரபலங்கள் பங்கேற்று பேசினர்.

கூட்டத்தில், வடிவேலு பேசியதாவது: முதல்வர் ஸ்டாலினுக்கு 73 வயது போல் தெரியவில்லை, 37 வயது இளைஞரைப் போல் செயல்படுகிறார். யாரெல்லாம் தி.மு.க.,வை அழிக்க வேண்டும் என்று சொன்னார்களோ, அவர்கள் ஆள் தெரியாமல் அழிந்து விட்டனர். தி.மு.க.,வுக்கு தஞ்சாவூர் கோபுரம் போல வரலாறு உண்டு. அதனால், அது நிமிர்ந்து நிற்கிறது.

மகளிர் உரிமை தொகையில் 5000 ரூபாய் கொடுத்து மக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார் முதல்வர் ஸ்டாலின். இந்த செய்தியை கேட்டு தி.மு.க., அழிய வேண்டும் என்று சொன்ன பலர் அழிந்துவிட்டனர். தி.மு.க.,வும் ஸ்டாலினும் இருந்தால் மட்டுமே தமிழகத்திற்கும் மக்களுக்கும் பாதுகாப்பு.

வரும் தேர்தலில், தி.மு.க., 200 தொகுதிகளில் வெற்றி பெற்று ஸ்டாலின் மீண்டும் முதல்வர் ஆவார். அதற்காக பொதுமக்கள் ஏற்கனவே முடிவு எடுத்து விட்டார்கள். மீண்டும் முதல்வராக உள்ள ஸ்டாலினுக்கு இப்பொழுதே வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு வடிவேலு பேசினார்.

Source link