தி.மு.க., ஆட்சியில் இருந்து தமிழக மக்கள் விடுதலை பெற வேண்டும்; விடிவு காலம் பிறக்க வேண்டும். தி.மு.க., கூட்டணியில்

தி.மு.க., ஆட்சியில் இருந்து தமிழக மக்கள் விடுதலை பெற வேண்டும்; விடிவு காலம் பிறக்க வேண்டும். தி.மு.க., கூட்டணியில் குழப்பங்கள் உள்ளன. அங்கு பல கட்சிகள் மன நிறைவாக இல்லை. கரூர் தொகுதி மக்கள் புறக்கணித்ததால், தி.மு.க., முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கோவையில் சீட் வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட சில தொகுதிகளில் பா.ஜ., போட்டியிடாதது குறித்து, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் விளக்கம் அளித்து விட்டார். தி.மு.க., அரசை வீட்டுக்கு அனுப்புவதே எங்கள் கூட்டணியின் நோக்கம். தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை, இந்த தேர்தலில் போட்டியிட வேண்டும். ஆன்லைன் வாயிலாகவே தேர்தல் பிரசாரத்துக்கு அனுமதி வழங்கப்படுகிறது. த.வெ.க., தலைவர் விஜயை பிரபலப்படுத்தவே, அவருக்கு அனுமதி வழங்கவில்லை என அக்கட்சியினர் கூறுகின்றனர்.

– எல்.முருகன் மத்திய இணை அமைச்சர், பா.ஜ.,

Source link