இடைக்கால பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் வெளியாவது இல்லை. ஆனால், அதையும் தாண்டி, தமிழக இடைக்கால பட்ஜெட்டை சரியாக படித்துப் பார்த்தால், இளைஞர்களுக்கு, விளையாட்டுத் துறைக்கு தேவையான பல நல்ல விஷயங்கள் இருப்பது தெரியும். சட்ட சபையில் வெளிநடப்பு செய்ய வேண்டும் என்ற காரணத்திற்காக, அரசியல் நாடகத்தை தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் அரங்கேற்றுவது சரியல்ல.
பா.ஜ., தங்கள் கூட்டணியை சரியாக வைத்துக் கொண்டால் போதும். மற்ற கூட்டணிகளை பற்றி, எதற்காக கவலைப்படுகிறார்கள் என தெரியவில்லை. தி.மு.க., – காங்., கூட்டணி பல ஆண்டுகள் நீடித்து, நிலைத்திருக்கக்கூடிய கூட்டணி. அதில், எந்தவித மாறுதலும் வர வாய்ப்பு இல்லை. மாநிலத்தையே அடகு வைத்த எதிர்கட்சி தலைவர் பழனிசாமிக்கு, தி.மு.க.,வின் அடிப்படை கொள்கையே, ‘மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி’ என்பது தெரியவில்லை.
– கனிமொழி,
துணை பொதுச்செயலர்,
தி.மு.க.,
