தி.மு.க., தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியில் நீடிக்கும்; வைகோ நம்பிக்கை

சென்னை: தி.மு.க., தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியில் நீடிக்கும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இது குறித்து வைகோ கூறியதாவது:திராவிட இயக்கத்தை அழிப்போம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சொல்கிறார். அது எந்த காலத்திலும் நடக்காது. திராவிட இயக்கம் என்ற தியாகிகள் கோட்டையின் பக்கம், எவரும் நெருங்க முடியாது.

தமிழகத்தின் ஒளிமயமான எதிர்காலத்தை பாதுகாக்க தி.மு.க., அரசு தொடர வேண்டும். இந்த தேர்தலில், கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லாமல், தி.மு.க., தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியில் நீடிக்கும். அதற்கு, தி.மு.க., அரசு செயல்படுத்திய திட்டங்களே வழிவகுக்கும்.

‘ஸ்டாலினுக்கு பக்கபலமாக இருப்பேன்’ என, 11 ஆண்டுகளுக்கு முன், கருணாநிதியின் இரு கரங்களையும் பிடித்து உறுதியளித்தேன். தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சீரழிந்துவிட்டதாக பேசுகிறார் முன்னாள் முதல்வர் பழனிசாமி. ஆனால், அவர் முதல்வராக இருந்தபோது ஸ்டெர்லைட் முதலாளிகளுக்கு எடுபிடியாக இருந்து, 13 உயிர்களை பலி கொண்டார். இவ்வாறு வைகோ கூறினார்.

Source link