தி ருச்செந்துார் தொகுதி பா.ஜ., வேட்பாளர் ராதாகிருஷ்ணனை ஆதரித்து, அக்கட்சியின் சிறுபான்மை பிரிவு தேசிய செயலர்

தி ருச்செந்துார் தொகுதி பா.ஜ., வேட்பாளர் ராதாகிருஷ்ணனை ஆதரித்து, அக்கட்சியின் சிறுபான்மை பிரிவு தேசிய செயலர் வேலுார் இப்ராஹிம் நேற்று முன்தினம் பிரசாரம் செய்தார்.

ஆத்துார் பகுதியில் அவர் திறந்தவேனில் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டபோது, பா.ஜ., தொண்டர் ஒருவர் அவருக்கு வேல் பரிசளித்தார். அதை பெற்றுக் கொண்ட வேலுார் இப்ராஹிம், திறந்தவேனில் நின்று கையில் வேல் ஏந்தியபடி, அருணகிரிநாதர் அருளிய திருப்புகழில், முதல் பாடலான, ‘முத்தைத்தரு பத்தித் திருநகை’ என்ற பாடலை முழுமையாக பாடி அசத்தினார்.

தொடர்ந்து, பேசிய அவர், ‘தேர்தல் பிரமாண பத்திரத்தில் படிப்பை முறையாக காட்டாத நபர் தான், இங்கு தி.மு.க., வேட்பாளர். அதை அறிந்து அனைவரும் பா.ஜ.,வுக்கு ஓட்டு போடுங்கள்’ என கேட்டுக் கொண்டார்.

Source link