தீபாவளிப் பண்டிகை 2026 எப்போது? இந்த நாளில் லட்சுமி பூஜை செய்வதற்கான நேரம் என்ன?

இந்தியாவில் கொண்டாடப்படும் மிகப் பெரிய பண்டிகைகளில் ஒன்று தீபாவளி. இந்தியாவில் மட்டுமின்றிய உலகம் முழுவதிலும் இந்தியார்களும் இந்த நாளை கொண்டாடுவது உண்டு. இந்துக்கள் மட்டுமின்றி புத்த மதம், ஜையின மதம், சீக்கிய மதத்தை சேர்ந்தவர்களும் தீபாவளி பண்டிகையை அவரவர் முறைப்படி கொண்டாடுவது வழக்கமாக உள்ளது. வீடு முழுவதும் தீபங்கள் ஏற்றி, தீபங்களின் ஒளியுடன், தீபங்களின் பண்டிகையாக ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

தீபாவளிப் பண்டிகை கொண்டாட்டத்திற்குரிய பண்டிகையாக கருதப்பட்டாலும், ஆன்மீக ரீதியாக மகாலட்சுமியின் அருளை பெறுவதற்குரிய நாளாக தீபாவளி திருநாள் கொண்டாடப்படுகிறது. தென் மாநிலங்களில் ஒரு நாள் பண்டிகையாக தீபாவளி கொண்டாடப்பட்டாலும், வட மாநிலங்களில் 5 நாள் பண்டிகையாக தீபாவளியை கொண்டாடுவது வழக்கம். வீட்டை சுத்தம் செய்து, அலங்கரிப்பது முதலே தீபாவளி கொண்டாட்டங்கள் துவங்கி விடும். இறுதி நாளில் மகாலட்சுமியை வீட்டில் வரவேற்பு, பூஜைகள் செய்து, அவரின் ஆசிகளை பெறும் நாளாக தீபாவளி திருநாள் கருதப்படுகிறது.

தீபாவளிப் பண்டிகை 2026 தேதி :

தீபாவளிப் பண்டிகை 2026 தேதி நவம்பர் 08 ஞாயிறு தந்தேராஸ் நவம்பர் 06 வெள்ளி சோட்டா தீபாவளி நவம்பர் 07 சனி தீபாவளி(லட்சுமி பூஜை) நவம்பர் 08 ஞாயிறு கோவர்த்தன பூஜை நவம்பர் 09 திங்கள் பாய் தூஜ் நவம்பர் 10 செவ்வாய் அமாவாசை திதி துவக்கம் நவம்பர் 08 பகல் 12 அமாவாசை திதி நிறைவு நவம்பர் 09 பகல் 12.46 லட்சுமி பூஜை 2026 நேரம் நவம்பர் 08 மாலை 05.30 முதல் இரவு 08.30 வரை

தீபாவளி கொண்டாடும் முறை :

– தீபாவளி பண்டிகை பண்டிகை கொண்டாடப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே வீட்டை சுத்தம் செய்து, அலங்கரித்து விட வேண்டும்.

– தீபாவளியின் முதல் நாளான தந்தேராஸ் அன்று தன்வந்திரி பகவானை வழிபட வேண்டும். மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றாக கருதப்படும் தன்வந்திரி பகவானை வழிபடுவதால் நோயற்ற வாழ்வும், ஆரோக்கியமும், செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை. இது அக்ஷய திரிதியைக்கு இணையான செல்வங்கள் சேருவதற்கான நாளாகவும் கதப்படுகிறது.

– தீபாவளியின் 2ம் நாளை சோட்டா தீபாவளி என்கிறார்கள். அதாவது தீபாவளியை கொண்டாட தயாராகும் நாளையே சோட்டா தீபாவளி என்கின்றனர்.

– மூன்றாம் நாளில் தீபாவளி கொண்டாட்டமும், அன்று மாலை லட்சுமி பூஜையும், குபேரர் வழிபாடும் செய்து, மகாலட்சுமியின் அருளை பெற வேண்டும். இந்த நாளில் லட்சுமி தேவி ஒவ்வொரு வீட்டிற்கும் எழுந்தருளி ஆசி வழங்குவதாக ஐதீகம்.

– ஸ்ரீகிருஷ்ணர், கோவதர்த்தன மலையை தாங்கி பிடித்து கோகுலவாசிகளை காத்ததை நன்றியுடன் நினைவுகூரும் நாளாக கோவர்த்தன பூஜை கொண்டாடப்படுகிறது.

– இறுதியாக பாய் தூஜ் என்பது சகோதர உறவை போற்றும் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.

தீபாவளியை ஏன் கொண்டாட வேண்டும்?

– தீபாவளி கொண்டாடுவதற்கான கதைகள் ஒவ்வொரு மாநிலத்திற்கும் வேறுபட்டாலும் தீமையை நன்மை வெற்றி கொண்டு, இருள் நீங்கி, ஒளி பிறந்த நாளாகவும், அறியாமை நீங்கி, ஞானம் பெறுவதற்கான நாளாகவும் கொண்டாடப்படுகிறது.

– ராவணனை வதம் செய்த பிறகு, 14 ஆண்டுகள் வனவாசம் முடிந்து ஸ்ரீராமர், அயோத்திக்கு திரும்பிய நாளே தீபாவளி என இந்துக்களின் ஒரு பிரிவினர் நம்புகிறார்கள்.

– நரகாசுரனை, ஸ்ரீகிருஷ்ணர் வதம் செய்த நாளாகவும், மகாலட்சுமி செல்வ வளங்களை அருளும் நாளாகவும் இந்துக்களில் மற்றொரு பிரிவினர் குறிப்பிடுகின்றனர்.

– மகாவீரர், ஆன்மீக ஞானம் பெற்று, நிர்வாண நிலையை அடைந்த நாளே தீபாவளி என ஜையினர்கள் குறிப்பிடுகிறார்கள்.

– குரு ஹரிகோவிந்த சிங் சிறையில் இருந்து விடுதலை பெற்று அமிர்தசரஸ் திரும்பி நாள் என சீக்கியர்கள் கொண்டாடுகிறார்கள்.

Source link