'தீமேட்டிக்' இனி 'ஹைப்ரிட்' ஐ.சி.ஐ.சி.ஐ., பண்டு மறுசீரமைப்பு

‘செபி’ மற்றும் ‘ஆம்பி’ அமைப்புகளின் புதிய விதிமுறைகளுக்கு ஏற்ப, ‘ஐ.சி.ஐ.சி.ஐ., புருடென்ஷியல்’ நிறுவனம் தனது ‘தீமேட்டிக் அட்வான்டேஜ் பண்டு’ திட்டத்தை மறுசீரமைப்பு செய்துள்ளது. இந்த மாற்றங்கள் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

அதன் பிறகு, இந்த பண்டு திட்டமானது ‘ஐ.சி.ஐ.சி.ஐ., புருடென்ஷியல் அக்ரசிவ் ஹைப்ரிட் ஆக்டிவ் பண்டு ஆப் பண்டு’ என அழைக்கப்படும்.

பெயருக்கு ஏற்றார் போல, இது ஒரு ‘அக்ரசிவ் ஹைப்ரிட்’ வகை திட்டமாக மாற்றப்படுகிறது. பல்வேறு துறைகளை சார்ந்த மியூச்சுவல் பண்டு திட்டங்களில் முதலீடு செய்து வந்த இந்த திட்டம், இனி பங்குகள் மற்றும் கடன் பத்திரங்கள் என இரண்டிலும் கலந்து முதலீடு செய்யும்.

அதாவது 65 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை பங்கு சார்ந்த திட்டங்களிலும், 20 சதவீதம் முதல் 35 சதவீதம் வரை கடன் சார்ந்த திட்டங்களிலும் முதலீடு செய்யப்படும் என்றும், 5 சதவீதம் ரொக்க கையிருப்பாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றங்கள் முதலீட்டாளர்களுக்கு பிடிக்கவில்லை என்றால், எந்தவிதமான ‘எக்சிட் லோடு’ கட்டணமும் இன்றி வெளியேற நாளை வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

Source link