தீர்வு சார்ந்த பண்டுகள் ரத்து முறையிட 'ஆம்பி' முடிவு

‘மி யூச்சுவல் பண்டு துறையில் செபி கொண்டு வந்துள்ள புதிய மாற்றங்கள், முதலீட்டாளர்களின் உணர்வுப்பூர்வமான பிணைப்பை பாதிக்கக்கூடும்’ என இந்திய மியூச்சுவல் பண்டு சங்கமான ‘ஆம்பி’ கவலை தெரிவித்துள்ளது.

கடந்த பிப்ரவரி 26ம் தேதி செபி மேற்கொண்ட சீர்திருத்த நடவடிக்கையின்படி, குழந்தைகளின் கல்வி, ஓய்வுக்கால தேவை போன்றவற்றுக்கான தீர்வு சார்ந்த பிரத்யேக மியூச்சுவல் பண்டு திட்டங்கள் இனி தனித்தனியாக இருக்காது. அவையனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு ,’லைப் சைக்கிள் பண்டு’ என்ற புதிய பிரிவின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.

இந்நிலையில், “இலக்கை குறிக்கும் பெயரிலேயே திட்டம் இருந்தால் தான், அதாவது குழந்தைகளுக்காக சேமிக்கிறோம் அல்லது ஓய்வுகாலத்துக்காக சேர்க்கிறோம் என்ற மனோபாவம் ஏற்பட்டு முதலீடு செய்ய துாண்டும். அதை மாற்றினால் முதலீட்டாளர்கள் வெளியேற வாய்ப்புள்ளது. தற்போது இந்த திட்டங்களில் மட்டும் கிட்டத்தட்ட 63 லட்சம் முதலீட்டாளர்கள் உள்ளனர்.

இவர்களின் முதலீட்டு மதிப்பு 57,000 கோடி ரூபாய். எனவே, இந்த ரத்து நடவடிக்கையை மறுபரிசீலனை செய்ய சொல்லி, செபிக்கு கோரிக்கை மனு அளிக்க ஆம்பி முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.

Source link