துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட குரூப்-1 பதவிகளுக்கு ஏப். 15, 16-ல் நேர்முகத் தேர்வு

சென்னை: துணை ஆட்​சி​யர், டிஎஸ்பி உள்​ளிட்ட குரூப்-1 பதவி​களுக்கு ஏப்​ரல் 15, 16 ஆகிய தேதி​களில் நேர்​முகத் தேர்வு நடை​பெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறி​வித்​துள்​ளது.

இது தொடர்​பாக டிஎன்​பி எஸ்சி செய​லா​ளர் மற்​றும் தேர்வு கட்​டுப்​பாட்டு அலு​வலர் (பொறுப்​பு) பானோத் ம்ரு​கேந்​தர்​லால் வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பு: குரூப்-1 பதவி​களின் (துணை ஆட்​சி​யர், டிஎஸ்​பி) நேரடி நியமனத்​துக்​கான முதன்​மைத் தேர்​வு​கள் டிசம்​பரில் நடை​பெற்​றன. அத்​தேர்வை 1,568 பேர் எழு​தினர். எழுத்​துத் தேர்வு மதிப்​பெண், இட ஒதுக்​கீடு, காலி​யிடங்​கள் உள்​ளிட்ட விதி​களின்​படி அசல் சான்​றிதழ் சரி​பார்ப்பு மற்​றும் நேர்​முகத் தேர்​வுக்கு 160 பேர் தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளனர்.

Source link