துணை முதல்வர் உதயநிதியிடம் முதல்வர் ஸ்டாலின் நேர்காணல்

சென்னை: சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட, விருப்ப மனு வழங்கிய, துணை முதல்வர் உதயநிதியிடம், முதல்வர் ஸ்டாலின் நேற்று நேர்காணல் நடத்தினார்.

சென்னை அறிவாலயத்தில் நேற்று ஐந்தாம் நாளாக நேர்காணல் நடந்தது. நேற்று காலை தி.மு.க.,வின் கடலுார் கிழக்கு, விழுப்புரம் வடக்கு, விழுப்புரம் மத்தி, விழுப்புரம் தெற்கு, காஞ்சி புரம் தெற்கு மாவட்டங்களுக்கான நேர்காணல் நடந்தது.

சர்ச்சைக்குரிய கருத்து களை பேசியதாக, அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட பொன்முடி, இந்த தேர்தலில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்யவில்லை.

அவர் கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற திருக்கோவிலுாரில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, அவரது மகன் கவுதம சிகாமணி மனு அளித்ததால், அவரிடம் நேர்காணல் நடத்தப்பட்டது.

மாலையில் திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மத்தி, திருவள்ளூர் மேற்கு, காஞ்சிபுரம் வடக்கு, சென்னை ஆகிய மாவட்டங்களுக்கு நேர்காணல் நடந்தது.

சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட விருப்ப மனு வழங்கிய துணை முதல்வர் உதயநிதியிடம், முதல்வர் ஸ்டாலின் நேர்காணல் நடத்தினார்.

இதேபோலவே, மறைந்த கருணாநிதி, தி.மு.க., தலைவராக இருந்தபோது, அவருடைய மகனும் தற்போதைய தி.மு.க., தலைவருமான ஸ்டாலின், தேர்தலில் போட்டியிட விரும்பி, விருப்பமனு அளித்த போதெல்லாம் நேர்காணல் நடத்தி இருக்கிறார்.

Source link