துபாய்: ஈரான் ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்காவின் எப் – 15 போர் விமானத்தில் இருந்த விமானியை,

துபாய்: ஈரான் ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்காவின் எப் – 15 போர் விமானத்தில் இருந்த விமானியை, ஹாலிவுட் படத்தை மிஞ்சும் பாணியில், ஈரான் எல்லைக்குள் நுழைந்து 48 மணி நேரத்துக்குள் அமெரிக்க படைகள் மீட்டுள்ளன.

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் பிப்., 28ல் போரை துவக்கின. இலக்கில்லாத இந்த போர், ஒரு மாதத்தை கடந்து நடந்து கொண்டிருக்கிறது.

பொய் பிரச்சாரம்

அமெரிக்கா பேச்சு நடத்தும் திட்டங்களை முன்மொழிந்தாலும் ஈரான் அதற்கு சம்மதிக்கவில்லை.

இந்நிலையில், கடந்த 3ம் தேதி அமெரிக்காவின் ‘எப்-15 இ ஸ்டிரைக் ஈகிள்’ என்ற போர் விமானம் தெற்கு ஈரானில் உள்ள ராணுவ நிலைகள், ஏவுகணை தளங்களை அழிக்க அப்பகுதியில் பறந்தது.

இந்த விமானத்தை ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையினர் சுட்டு வீழ்த்தினர். அதில் பயணித்த இரு விமானிகளும் அவசரகால வெளியேறும் அமைப்பை பயன்படுத்தி தப்பித்தனர். இதில் ஒருவர் சில மணி நேரங்களில் மீட்கப்பட்டார்.

ஆனால், மற்றொரு விமானி, மலைப்பாங்கான பகுதியில் தனியாக சிக்கினார். காயங்கள் இருந்தும், தப்பி ஓடி, ஈரானிய படைகள் மற்றும் உள்ளூர் பழங்குடியினரிடமிருந்து மறைந்து கொண்டார்.

‘அமெரிக்க விமானப் படை வீரரை பிடித்து தந்தால் சன்மானம் வழங்கப்படும்’ என ஈரான் அறிவித்தது. இதனால் விமானியை பலரும் தேடி வந்தனர்.

அவர்களை திசை திருப்ப அமெரிக்க உளவு பிரிவான சி.ஐ.ஏ., உடனடியாக ஒரு பொய் பிரச்சாரத்தை பரப்பியது.

அமெரிக்க படைகள் ஏற்கனவே எப்-15 விமானியர் இரு வரையும் மீட்டு விட்டன. தரை வழியாக அழைத்துச் செல்ல திட்டமிடுகின்றன என்பதே அது. இதை நம்பி ஈரான் படைகள் மற்றும் பொது மக்கள் தே டலை மாற்றினர்.

அந்த சமயத்தில் அமெரிக் க ராணுவம், செயற்கைக்கோள், ஆளில்லா விமானம் மற்றும் உளவு தகவல்கள் மூலம் விமான படை வீரரின் சரியான இருப்பிடத்தை நேற்று முன் தினம் கண்டுபிடித்தது.

மீட்பு நடவடிக்கை

அதன் பின், அன்றிரவே டஜன் கணக்கான அமெரிக்க விமானங்கள் ஈரானுக்குள் அணிவகுத்தன. ‘எப்–35’ விமானங்கள் ஈரானிய ரேடார் மற்றும் ஏவுகணை தளங்களை கண்காணித்தன.

‘ஏ – 10 வார்தாக்’ விமானங்கள், மீ ட்பு ஹெலிகாப்டர் மீது தரையில் இருந்து வரும் தாக்குதலை தடுத்தன. எச்.சி., – 130 விமானம், மீட்பு ஹெலிகாப்டர்களுக்கு தேவையான எரிபொருளு டன் வலம் வந்தது.

‘எச்.எச்., – 60டபிள்யூ ஜாலி க்ரீன் 2’ எனும் ஹெலிகாப்டர்கள் சிக்கியிருந்த விமானியை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டன. ஈரான் ராணுவ ரேடார்களில் இருந்து மறைந்து, அமெரிக்க விமானங்கள் குறைவான உயரத்தில் பறந்தன.

இதற்கிடையே ‘டெல்டா’, ‘சீல்’ உள்ளிட்ட நுாற்றுக்கணக்கான அமெரிக்க சிறப்பு படையினரும் இரவில் தரை வழியாக விமானி இருந்த பகுதிக்குள் நுழைந்தனர்.

அப்போது ஈரான் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். ‘ஏ-10 வார்தாக்’ விமானங்கள் பதிலடி நடத்தி அவர்களை விரட்டியது. அதன் பின் காயமடைந்த விமானப் படை வீரரை கயிறு கட்டி ஹெலிகாப்டருக்கு ஏற்றி வெற்றிகரமாக வெளியேறினர்.

இந்த மீட்பு பணியின் போது ஒருவரும் உயிரிழக்கவில்லை என அமெரிக்க ராணுவம் கூறியுள்ளது.

இது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளதாவது:

அமெரிக்க ராணுவம், வரலாற்றிலேயே மிக துணிச்சலான தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டது.

ஈரானில் சிக்கியிருந்த நம் விமானப் படை வீரரை மணிக்கு மணி எதிரிகள் நெருங்கி வந்து கொண்டிருந்தனர். அவர் ஒருபோதும் தனியாக இல்லை. அவருக்கு ஆதரவாக அமெரிக்க ராணுவமே நின்ற து. தற்போது அவர் மீட்கப்பட்டு நலமுடன் உள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

விமானங்களை அழித்தோம்: ஈரான்

அமெரிக்க ராணுவம் எந்த ஒரு உயிரிழப்பும் இல்லாமல் ஈரானில் சிக்கிய விமானியை மீட்டதாக கூறியிருந்த நிலையில், ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: அமெரிக்க விமானி மீட்பு நடவடிக்கையின்போது தெற்கு இஸ்பஹான் பகுதியில் பல அமெரிக்க விமானங்களை தாக்கினோம். இதில் எச்.சி., – -130, இரண்டு பிளாக் ஹாவ்க் ஹெலிகாப்டர்கள் உட்பட பல விமானங்கள் அழிக்கப்பட்டன; ஐந்து பேர் உயிரிழந்தனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்காவுக்கு எச்சரிக்கை

அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரான் 48 மணி நேரத்தில் அமைதி ஒப்பந்தம் செய்து ஹார்முஸ் ஜலசந்தியை திறக்காவிட்டால், கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என எச்சரித்தார். இத ற்கு பதிலடி தந்துள்ள ஈரான் அதிகாரிகள், ‘எங்களின் உள்கட்டமைப்புகளை அமெரிக்கா அல்லது இஸ்ரேல் தாக்கினால், மேற்கு ஆசியாவில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களும் இஸ்ரேல் உள்கட்டமைப்பும் கடுமையாக தாக்கப்படும். மேலும், பெரிய பதில் தாக்குதல் காத்திருக்கிறது’ என் றனர்.

Source link