துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்தியப் பாடத்திட்டத்தைப் பின்பற்றும் ஏராளமான பள்ளிகள், மாணவர்களுக்கு

துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்தியப் பாடத்திட்டத்தைப் பின்பற்றும் ஏராளமான பள்ளிகள், மாணவர்களுக்கு முன்கூட்டியே ஆண்டு இறுதி விடுமுறையை அறிவித்துள்ளன.

யுஓஇ, சவுதி அரேபியா, பஹ்ரைன், ஈரான், குவைத், ஓமன், கத்தார் ஆகிய நாடுகளில் இந்தியப் பாடத்திட்டத்தைப் பின்பற்றும் ஏராளமான பள்ளிகள் செயல்பட்டு வருகின்றனர். மேற்காசியாவில் நிலவும் போர் பதற்றம் காரணமாக, இன்றும் (மார்ச் 9), நாளையும் நடைபெறவிருந்த சிபிஎஸ்இ தேர்வுகள் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவது இது நான்காவது முறையாகும்.

நாளை நிலவும் சூழலை ஆய்வு செய்த பிறகு, மார்ச் 12ம் தேதி முதல் நடைபெறவிருக்கும் தேர்வுகள் குறித்த முடிவை தேர்வு வாரியம் அறிவிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்தியப் பாடத்திட்டத்தைப் பின்பற்றும் ஏராளமான பள்ளிகள், மாணவர்களுக்கு முன்கூட்டியே ஆண்டு இறுதி விடுமுறையை அறிவித்துள்ளன. போர் பதற்றம் மற்றும் தேர்வு முடிவுகள் சரியான நேரத்தில் வெளியிடுவதை உறுதி செய்யவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் கல்வி அமைச்சகம் அனைத்துப் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கும், பணியாளர்களுக்கும் வசந்த கால விடுமுறையை அறிவித்துள்ளது.

Source link