துபாய்: யுஏஇ கடல்பகுதியில் கன்டெய்னர் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாக பிரிட்டன் கடல்சார் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. ராணுவ தளங்கள், விமான நிலையங்கள், குடியிருப்புகள் போன்ற இலக்குகளைக் கடந்து, கடல் பகுதியிலும் தாக்குதல் விரிவடைந்து விட்டன. ஈரான் நீர் மூழ்கிக் கப்பல்களை குறித்து அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த நிலையில், ஐக்கிய அரபு அமீரக கடல் பகுதியில், கன்டெய்னர் கப்பல் ஒன்று அடையாளம் தெரியாத ஏவுகணையால் தாக்கப்பட்டுள்ளதாக பிரிட்டன் கடல்சார் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலில் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால், டேங்கரில் இருந்து எண்ணெய் கசிந்து கடலில் கலந்து வருவதால், அது சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல் காரணமாக, வளைகுடா கடல் பிராந்தியத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கப்பல்களும் தாக்கப்படுமோ? என்ற அச்சம் எழுந்துள்ளது.
