சட்டமன்றத் தேர்தலை சந்திக்கும் கேரளாவில் ஆளும் இடது முன்னணி, காங்கிரஸ், பாஜக இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் நேற்று மாலை திருவானந்தபுரத்தில் ரோடு ஷோ நடத்திய பிரதமர் மோடி பேரணியில் பேசினார்.
அவர் கூறியதாவது, “காங்கிரசின் யுடிஎப், இடதுசாரிகளின் எல்டிப் கூட்டணியினர் அனைத்தைப் பற்றியும் பொய் சொல்கிறார்கள். நாட்டைத் தவறாக வழிநடத்துகிறார்கள், அதுவே அவர்களின் இயல்பாக இருக்கிறது.
பொய் சொல்வதில் அவர்கள் நிபுணர்கள். ‘கேரளா ஸ்டோரி’ படம் வந்தபோது, அதெல்லாம் பொய் என்று சொல்லத் தொடங்கினார்கள். ‘காஷ்மீர் ஃபைல்ஸ்’ வந்தபோது, அதெல்லாம் பொய் என்று சொல்லத் தொடங்கினார்கள். இப்போது ‘துரந்தர்’ திரைப்படம் வந்திருக்கிறது, இதையும் பொய் என்று பிரச்சாரம் செய்கிறார்கள்.
