துாத்துக்குடி: 'உப்பளத் தொழிலை அழிக்கும் தி.மு.க.,வுக்கு ஓட்டுப்போட மாட்டோம்' என, எதிர்ப்பு தெரிவித்து,

துாத்துக்குடி: ‘உப்பளத் தொழிலை அழிக்கும் தி.மு.க.,வுக்கு ஓட்டுப்போட மாட்டோம்’ என, எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்கள், வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

துாத்துக்குடி சட்டசபை தொகுதிக்குட்பட்ட முள்ளக்காடு, அத்திமரப்பட்டி, சவேரியார்புரம், பொட்டல்காடுகளில், பல ஆயிரம் ஏக்கரில் உப்பளங்கள் உள்ளன. அங்கு, தமிழக அரசின் சிப்காட் நிறுவனம், நிலத்தை ஆர்ஜிதம் செய்து, கப்பல் கட்டும் தளம் அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

வேறு இடத்தில் கப்பல் கட்டும் தளம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி, உப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் உப்பளத் தொழிலாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். உப்பளத் தொழிலை அழிக்க காரணமாக உள்ள தி.மு.க.வுக்கு, இந்த தேர்தலில் ஓட்டுப்போட மாட்டோம் என, ஐந்து கிராமங்களை சேர்ந்த மக்கள் அறிவித்துள்ளனர்.

அவர்கள் கூறுகையில், ‘உப்பளங்களை அழிக்காமல், வேறு இடத்தில் கப்பல் கட்டும் தளம் அமைக்க வேண்டும் என, தொகுதி எம்.எல்.ஏ.வான அமைச்சர் கீதா ஜீவனிடம் கூறியும், அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எங்கள் பகுதிக்கு, அவர் ஓட்டு கேட்டு வர அனுமதிக்க மாட்டோம். எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில், ஐந்து கிராமங்களின் வீடுகளிலும் கருப்புக் கொடி ஏற்றி உள்ளோம்’ என்றனர்.

Source link