தூத்துக்குடி கந்தன் காலனியில் வீட்டில் தனியாக இருந்த சசிகலா என்ற பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அவரது கழுத்தில் இருந்த 4 சவரன் தங்க நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தென்பாகம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, கொலையில் ஈடுபட்ட மர்ம நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
தமிழகத்தில் அடுத்தடுத்து நடைபெறும் குற்ற சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், தூத்துக்குடி கொலை சம்பவத்திற்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
முக ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி கந்தன் காலனியில் வீட்டில் தனியாக இருந்த சசிகலா எனும் பெண்மணி வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்தூத்துக்குடியில் 4 நாட்களில் 7 கொலைகள்!இதற்கு என்ன விநோத விளக்கத்தை மாவட்டக் காவல்துறையினர் வெளியிடப் போகின்றனர்? வெளியில்தான் பாதுகாப்பில்லை, நிம்மதியாக யாரும் நடமாட முடியவில்லை என்று பார்த்தால், வீட்டுக்குள் இருக்கவே அச்சமடையும் நிலைக்கு மக்களைத் தள்ளியதுதான் த.வெ.க.வின் சாதனையா?”என்று பதிவிட்டுள்ளார்.
