தூத்துக்குடி, சிவகங்கை மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்

சென்னை,

தமிழகத்தில் 5 ஐ.பி.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, திருச்சி ஆயுதப்படை டி.ஐ.ஜி. எம்.விஜயலட்சுமி, சென்னை ஊர்க்காவல் படை டி.ஐ.ஜி.யாகவும், சென்னை சிபிசிஐடி எஸ்.பி. டி.சண்முகபிரியா, சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை மேற்கு சரக எஸ்.பி.யாகவும், ராமேஸ்வரம் கோட்ட உதவி கண்காணிப்பாளர் பி.ஆர்.மீரா, சென்னை தலைமையிட கணினி பிரிவுக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் தூத்துக்குடி எஸ்.பி. அபிஷேக் குப்தா, சிவகங்கை எஸ்.பி.யாகவும், சிவகங்கை எஸ்.பி. சிவபிரசாத், தூத்துக்குடி எஸ்.பி.யாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Source link