தென்காசி: காசில்லாததால் தோற்று போயி நிற்கிறேன். 4 முறை தேர்தலில் தோற்றிருக்கிறேன் என தேர்தல் பிரசாரத்தில்

தென்காசி: காசில்லாததால் தோற்று போயி நிற்கிறேன். 4 முறை தேர்தலில் தோற்றிருக்கிறேன் என தேர்தல் பிரசாரத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.

தென்காசியில் தேர்தல் பிரசாரத்தில் சீமான் பேசியதாவது: 4 முறை தேர்தலில் தோற்றிருக்கிறேன். தோற்கடித்தது நீங்கள்தான். ஆனால் நான் தோற்கவில்லை. நீங்கள் தான் தோற்றுப் போனீர்கள். தோல்விக்கு பயந்து இரண்டு தொகுதிகளில் போய் போட்டியிடுகிறனா? என்னை பார்த்தால் தோற்றவன் போல் இருக்கிறதா? துவண்டு படுத்து விட்டேனா?

காசு இருந்தால் தான் அரசியல் செய்ய முடியும் என்ற நிலை இருந்தால், கக்கன் அமைச்சராகி இருக்க முடியுமா? என்று யோசித்துப் பாருங்கள். காசு இல்லாததால் உங்களது உடன் பிறந்தவன் தோற்று தோற்றுப் போய் நிற்கிறேன். அப்பொழுது தகுதி எதில் வருகிறது பணத்திலா? பணத்திற்கு தகுதி என்றால் முதலாளிகளுக்கான அதிகாரம் தான் வரும். உங்களுக்கு எப்படி அதிகாரம் வரும்.

பணம்தான் அரசியலை தீர்மானிக்கும் என்றால் காமராஜர் எப்படி வந்து இருப்பார். இந்த மகன் பணமாக இல்லை, பிறந்த இனமாக நிற்கிறேன். நீங்கள் என்றைக்கு உணர்கிறீர்களோ அன்றைக்கு என்னை வெற்றி பெற வைத்தால் போதும். நான் ஜாதி, மதம் சொல்லி ஓட்டு கேட்கிறவனா?

நான் பிறந்த இனம் தமிழன் என்பதைச் சொல்லி ஓட்டு கேட்கிறேன். அப்படித்தான் நாங்கள் இந்த பயணத்தை தொடங்குகிறோம். முகத்தை காட்டி ஓட்டு கேட்கிறவன் அல்ல; நல்ல கருத்தை சொல்லி ஓட்டு கேட்கிறவன். நான் கோடிகளை கொட்டி அரசியல் செய்ய வந்த பிள்ளை அல்ல. உயர்ந்த கொள்கைகளை முன்னிறுத்தி அரசியல் செய்ய வந்த பிள்ளை. ஓட்டிற்கு காசு தர மாட்டேன். இவ்வாறு சீமான் பேசினார்.

Source link