தென்னிந்தியாவைத் திரும்பிப் பார்க்க வைக்கும் டாப் 4 Gen Z மலையாள நாயகிகள்!

யதார்த்தமான கதைகள், உணர்வுப்பூர்வமான நடிப்பு – இதுதான் மலையாள சினிமாவின் அடையாளம். ஆனால் இன்று அந்த அடையாளத்தைத் தாண்டி, சமூக வலைத்தளங்களின் ரீல்ஸ் முதல் தியேட்டர் ஸ்கிரீன் வரை தென்னிந்திய ரசிகர்களின் ‘க்ரஷ்’ ஆக மாறியிருக்கிறார்கள் நான்கு இளம் புயல்கள்.

திறமையால் மட்டுமே சிகரம் தொடும் அந்த ‘Gen Z’ மேஜிக் பற்றிப் பார்ப்போம்!

Mamitha Baiju

மமிதா பைஜூ:

கேரளம் மாநிலம் பத்தனம்திட்டாவைப் பூர்வீகமாகக் கொண்ட மமிதா பைஜூ, பிஎஸ்சி சைக்காலஜி படித்தவர்.

“ஐ லைக் ரீனு…” இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி `பிரேமலு’ படம் பார்த்த பின் செய்த ட்வீட். இப்பவரைக்கும் டிரெண்டிங்கில் இருக்கும் கேரக்டர் பெயர். மமிதாவின் சினிமா வாழ்க்கை `பிரேமலு’க்கு முன் `பிரேமலு’க்குப் பின் என்று பிரிக்கமுடியும்.

2017- ல் மலையாளத்தில் வெளிவந்த `சர்வோபரி பாலக்காரன்’ படத்தில் ராஜி கேரக்டரில் சிறிய வேடத்தில் நடித்து கவனம் பெற்றவர். பின்னர் வெளிவந்த கோ கோ, சூப்பர் சரண்யா உட்பட 10க்கு மேற்பட்ட படங்களில் சிறு கேரக்டரில் நடித்து பிராமிஸிங் ஆக்டரஸாக பெயர் வாங்கியிருக்கிறார். இவருக்கு, 2024 -ல் வெளிவந்த `ரிபெல்’ முதல் நேரடித் தமிழ்ப் படம். `டியூட்’ படத்தில் இவர் ஆடிய கருத்த மச்சான் பாட்டுக்கு உலகமே ஆடியது தனி கதை.

ஹிட்டுக்கு என்ன காரணம்?

கருப்பு சட்டை, கூலிங் க்ளாஸ், கலர் லுங்கியில் இவர் ஆடிய டான்ஸ் இன்றைக்கும் ரீல்ஸ்ஸில் ஸ்க்ரோல் ஆகிக் கொண்டிருக்கிறது. நடனத்தில் க்ளாசிக் டான்ஸ், பரத நாட்டியம், வெஸ்டர்ன் என்று சரளமாக ஆடும் திறமை உண்டு.

இதுபோக, பக்கத்து வீட்டுப் பொண்ணு மாதிரி இருக்கிற சிம்பிளான அழகு, குட்டி குட்டி ரியாக்‌ஷன், இயல்பான டயலாக் டெலிவரி, ஓவர் ஆக்டிங் இல்லாத நடிப்பு, கோபம், அழுகை, சிரிப்பு, ஆக்ஷன் இப்படி எல்லாவற்றிலும் வெளுத்து வாங்குகிறார். இதெல்லாம் இவர் தனித்திறமை. சினிமாதான் இவர் கனவு.

Mamitha Baiju
Mamitha Baiju

மூவீஸ் லைன் அப்: கர, விஸ்வநாத் அன் சன்ஸ், ஜனநாயகன், இரண்டு வானம், பிரேமலு 2, பெத்லகேம் குடும்ப யூனிட்.

அனஸ்வர ராஜன்:

கேரளம் மாநிலம், கண்ணூரைச் சேர்ந்த அனஸ்வர ராஜன். சமீபத்தில் வெளிவந்த IMDb-இன் ‘மிகவும் பிரபலமான இந்தியப் பிரபலங்கள்’ பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். உலகளவில் பிரபலங்களின் திறமையை மதிப்பிடும் இந்தப் பட்டியலில் அவர் அடைந்துள்ள இந்த மின்னல் வேக வளர்ச்சியை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

அனஸ்வரா ராஜன்
அனஸ்வரா ராஜன்

“எனக்கு சின்ன வயசுல இருந்தே நடிக்கணும்னு ஆர்வம் இருந்தது. 2017-ல் வெளியான “உதயரணம் சுஜாதான்” தான் என் முதல் படம். அதில் ஆதிரா கேரக்டரில், அம்மாவின் கஷடங்களைப் புரிந்துக் கொண்டு ஜெயிப்பதாக நடித்திருந்தேன். விருதும் கிடைத்தது. அப்புறம் சூப்பர் சரண்யா, தண்ணீர் மத்தான் தினங்கள், நேரு, ரேகசித்திரம் போன்ற படங்களில் வித்தியாசமான கேரக்டரில் நடித்தது என் பாக்யம். தமிழில் எனக்கு பிடித்த நடிகர் விஜய்’’. `வித் லவ்’ ஹிட்டுக்குப் பின் அவர் நேர்காணலில் பேசியது.

2020ல் நேரடித் தமிழில் த்ரிஷாவோடு ராங்கி படத்தில் அறிமுகம் ஆனார்.

2023ல் மோகன் லால் நடிப்பில் வெளிவந்த `நேரு’ படத்தில் பார்வைசவாலுடைய இளம் பெண் கேரக்டரில் நடித்து திறமையை நிரூபித்தவர். படத்தின் க்ளைமாக்ஸ் கோர்ட் சீனில், தனக்கு நீதி கிடைத்துவிட்டது எனத் தெரிந்தவுடன் தனக்காகப் போராடிய மோகன் லாலின் முகத்தில் இரண்டு கைகள் வைத்து மெல்ல வருடி, இரண்டு கைகள் கூப்பி நன்றி சொல்வார். அனைவரும் மெய்மறந்து பார்த்த சீன் அது.

ஹிட்டுக்கு என்ன காரணம்?

மலையாளத் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று ஒரு ‘பான்-இந்திய’ (Pan-Indian) நட்சத்திரமாக உருமாறியதற்குக் காரணம் அவரது நடிப்புதான். காட்சிக்குத் தேவையான உணர்ச்சிகளை எளிதாகக் கடத்தி காட்சிக்கு என்ன தேவையோ அதை மிகை இல்லாமல் கொடுப்பதில் கில்லாடி.

அனஸ்வரா ராஜன்
அனஸ்வரா ராஜன்

தனக்கு கொடுக்கப்படிருக்கும் கதைக்கு ஏற்ப கதாபாத்திரமாகவே மாறும் திறமை கொண்டவர். மேலும் தமிழில் சரளமாகப் பேசும் திறமை கொண்டவர்.

மூவீஸ் லைன் அப்: 7ஜி ரெயின்போ காலனி 2, ஒரு பெரும்கலியாட்டாம் (Oru Perumgaliyattam), இட்லு அர்ஜூனா (Itllu Arjuna)

அனிஷ்மா அனில்குமார்:

கேரளம் மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் அனிஷ்மா.

“` சிறை’ படம் பார்த்துட்டு இயக்குநர்கள் வெற்றிமாறன், பா.ரஞ்சித் பாராட்டியது என் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம். ஸ்கூல் படிக்கும் காலத்திலேயே எனக்கு சினிமாவில் நடிக்கணும்ங்கிறது கனவு. நான் அப்போது கண்ட கனவுகள் இப்போது நிஜமாக நடக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. திடீர்னு என் கையை நானே கிள்ளிப் பார்த்துக்குவேன். இது கனவா நிஜமான்னு…

சிறை படத்தில்...
சிறை படத்தில்…

அப்புறம், நான் எந்தச் சப்போர்ட்டும் இல்லாமல் சினிமாவுக்கு வந்தேன். நானே. சொந்த முயற்சியா ஆடிசன்ல கலந்துக்குவேன். ஆனா, நிறைய ரிஜெக்‌ஷன் நடந்திருக்கு. யாரோ முன்பின் தெரியாத ஒருவர், என்னை பார்த்து, நீ ஹீரோயினுக்கு செட் ஆகமாட்டே. அக்கா, தங்கை கதாபாத்திரத்தில் நடிக்கலாம்னு சொன்னார். கஷ்டமாயிருந்தது.

அப்புறம்தான் `சிறை’ கமிட்டானேன். அனுபவம் வாய்ந்த நடிகைகளே நடிக்கத் தயங்கிய ஒரு கேரக்டர்தான் நீலோத்தி. இன்னிக்கும் நிறைய ரசிகர்கள் வாட்ஸப் ஸ்டோரீஸ்யும். டிபிலயும் என்னோட போட்டோவ வெச்சிருக்காங்க. ஒரு நடிகைக்கு எது சந்தோஷம் கொடுக்கும்னு கேட்டா, ரசிகர்கள் கொடுக்கும் அன்புதான். எல்லோருக்கும் வாழ்க்கை மீது ஒரு நம்பிக்கை இருக்கும். எனக்கும் இருக்கு. சிறை படத்தோட க்ளைமாக்ஸ் ஹேப்பி எண்டிங்காக இருந்ததால் மிகப்பெரிய ஹிட் ஆச்சு.’’ என்று அனிஷ்மா பகிர்ந்து கொண்டார்.

மலையாளத்தில் 2023-ல் `பூவன்’தான் இவருக்கு முதல் படம். அதன்பின், தெக்கு வடக்கு, ஐ அம் காதலன், மரணமாஸ் உள்ளிட்ட படங்கள் நடித்து கவனம் பெற்றார். அதிலும் `மரணமாஸ்’ படத்தில் பசில் ஜோசப்புடன் நடித்து மாஸ் காட்டியிருந்தார். `சிறை’யில் கலையரசியாகவும், `யூத்’ படத்தில் கனக வல்லியாகாவும் நடித்து எல்லோரிடமும் பூங்கொத்துகள் வாங்கிக் கொண்டிருக்கிறார்.

சூர்யா - அனிஷ்மா
சூர்யா – அனிஷ்மா

“உங்கள் அப்பாவித்தனமான சிரிப்புக்கு நான் மிகப்பெரிய ரசிகன்” என்றார் தனுஷ் ஒரு மேடையில். ஒரு கதாநாயகிக்குத் தேவையான அனைத்து இலக்கணத்தையும் உடைத்தவர்.

மூவீஸ் லைன் அப்: பெயரிடப்படாத ஒரு படத்தில் கமிட் ஆகியிருக்கிறார்.

ரியா சிபு:

கேரளம் மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் ரியா சிபு.

யார் இந்த டெலுலு. உலகமே தேடிய ஒரு பெயர். `சர்வம் மாயா’ ஹிட்டுக்குப் பின்னர் எல்லோருக்கும் பிடித்த ஒரு டெலுசன் ரியா. ஏற்கனவே, சோசியல் மீடியாவில் இவர் பதிவிடும் ரீல்ஸ்களுக்கு நிறைய ரசிகர்கள் உண்டு. 2024- ல் மலையாளத்தில் ‘கப்’ படம் மூலம் அன்னா குரியன் கதாபாத்திரத்தில் மேத்யூ தாமஸூடன் நடித்து கவனம் பெற்றார். தமிழில் வெளிவந்த விக்ரமின் `வீர தீர சூரன்’ படத்தின் இளம் தயாரிப்பாளர்.

sarvam maya நிவின் பாலி
sarvam maya நிவின் பாலி

“‘சர்வம் மாயா’ படம் என் வாழ்க்கையை மாற்றிய படம். இதன் மூலம் நிறைய ரசிகர்கள் எனக்கு கிடைத்திருக்கிறார்கள். நான் எங்கு சென்றாலும் `ஓய் டெலுலு’ என அன்பைப் பொழிகின்றனர். இந்தப் சிறப்பாக நடித்ததற்காக சூர்யா, ஜோதிகா வாழ்த்து மடல் அனுப்பியிருந்தாங்க. நான் எதிர்பாக்காத பாராட்டு அது. படத்தின் டைரக்டர் அகில், ஹீரோ நிவின் பாலி உட்பட டெக்னிக்கல் டீம் எல்லோரும் என்னோட நடிப்பை பாராட்டியது எனக்கு வாழ்நாள் மகிழ்ச்சி’’ எனத் தன் சந்தோசத்தைப் பகிர்ந்து கொண்டார்.

டெலுலு மாதிரி ஒரு அழகான பேய் நமக்கும் லைஃப் பார்ட்னராக கிடைக்க என்ன செய்யலாம்? என ரசிகர்கள் ஏங்கிக் கிடக்கின்றனர்.

ரியா ஷிபு | Riya Shidu
ரியா ஷிபு | Riya Shidu

மூவிஸ் லைன் அப்: அதிரடி( மலையாளம்)

கிளாமரை விடக் கதாபாத்திரத்திற்கும், நடிப்புத் திறமைக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் இந்த Gen Z நாயகிகள், மலையாள சினிமாவின் எல்லையைத் தாண்டி ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் ஆளத் தயாராகிவிட்டார்கள். இவர்களின் வெற்றி, சினிமாவில் நுழையத் துடிக்கும் ஆயிரக்கணக்கான சாமானிய பெண்களுக்கு ஒரு மிகப்பெரிய நம்பிக்கை!

Source link