தேசியம் பேட்டி:புனிதத்தை காப்பது அவசியம்

புனிதத்தை காப்பது அவசியம்! மேற்கு வங்கத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகையின்போது ஏற்பட்ட விதிமீறல் கவலை அளிக்கிறது. நம் நாட்டின் அரசியலமைப்பின் மிகவும் உயர்ந்த பதவியாக விளங்கும் ஜனாதிபதிக்கு உரிய கண்ணியத்தை நிலைநிறுத்துவது அவசியம். அந்த புனிதத்தை காப்பது, அனைத்து தலைவர்களின் கூட்டுப் பொறுப்பாகும். சந்திரபாபு நாயுடு ஆந்திர முதல்வர், தெலுங்கு தேசம் கட்சி

மன்னிப்பு கேட்க வேண்டும்! மேற்கு வங்கத்தில் ஜனாதிபதி முர்மு வருகையின் போது உரிய நெறிமுறை பின்பற்றப்படவில்லை. அரசியலுக்கு அப்பாற்பட்ட நாட்டின் உயர் பதவி வகிக்கும் அவரை, முதல்வர் மம்தாவோ, அமைச்சர்களோ வரவேற்காதது கண்டனத்திற்குரியது. இது, மம்தாவின் இழிவான மனநிலையை காட்டுகிறது. இதற்கு அவர், உடனே மன்னிப்பு கேட்க வேண்டும். மோகன் யாதவ் மத்திய பிரதேச முதல்வர், பா.ஜ.,

மதிப்பளிக்க வேண்டும்! ஜனாதிபதி பதவிக்கு உரிய நெறிமுறைகளை அனைவரும் பின்பற்றுவது அவசியம். ஜனாதிபதி முர்மு, ஒரு பெண் மட்டுமல்ல; பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர். அரசியலமைப்பு பதவிகளை, எந்த வகையிலும் அரசியலாக்குவதை தவிர்க்க வேண்டும். அப்பதவிக்கு மதிப்பளிப்பது டன், அதற்குரிய கண்ணியத்தையும் காக்க வேண்டும். மாயாவதி தலைவர், பகுஜன் சமாஜ் கட்சி

Source link