மாற்றத்திற்கான வழி!
மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் முதல்வர் மம்தா பானர்ஜியை, அவரது சொந்த தொகுதியான பவானிபூரில் தோற்கடிக்க வேண்டும். கடந்த தேர்தலில் நந்திகிராமில் சுவேந்து அதிகாரியிடம் தோல்வியை தழுவியதுபோல், பவானிபூரிலும் இம்முறை மம்தா தோல்வியடைவார்.
அமித் ஷா மத்திய அமைச்சர், பா.ஜ.,
அப்பட்டமான ஊழல்!
பிரதமர் மோடி, அமித் ஷா, முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா ஆகியோர் அசாமில், நில ஏ.டி.எம்., ஒன்றை அமைத்துள்ளனர். தங்களுக்கு தேவையான நிலத்தை அபகரித்து, தொழிலதிபர்கள் அதானிக்கும் அம்பானிக்கும் பதஞ்சலிக்கும் தாரை வார்த்துள்ளனர். இது, அப்பட்டமான ஊழல்.
ராகுல் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர், காங்கிரஸ்
போரை நிறுத்த முயற்சி!
அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரான் மீது தரைவழித் தாக்குதலை மேற்கொண்டால், நம் நாட்டிற்கு கூடுதல் சிக்கல் ஏற்படும். வளைகுடா நாடுகளில், இந்தியர்கள் பலர் பணிபுரிவதால், இது, மிகவும் சிக்கலான விவகாரம். இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வர பிரதமர் மோடி வலியுறுத்துவார் என நம்புகிறோம்.
அசாதுதீன் ஓவைசி தலைவர், ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சி
