தேசிய அளவில் மாணவர்கள் எழுச்சி: 2029 தேர்தல் வியூகம்- காங்கிரஸ்க்கு தான் சிக்கல் – impact for congress politics after cjp students protest won in neet question paper leak

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக மாணவர்கள் போராட்டம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த சூழலில் தேசிய அளவில் புதிய சக்தி உருவாகியிருப்பதாக கூறப்படும் நிலையில், இது யாருடைய அரசியலுக்கு சிக்கலாக மாறும் என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது.

CJP. கரப்பான் பூச்சி ஜனதா கட்சி. வெறும் இன்ஸ்டாகிராம் பக்கமாக முதலில் உருவானது. பிறகு இயக்கமாக மாறியது. மத்திய அரசின் கல்வித்துறை செயல்பாடுகளை விமர்சித்து போராட்டங்களை முன்னெடுத்தது. தற்போது அந்த போராட்டம் வெற்றியில் முடிவடைந்துள்ளது. மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேலும் நீட் விவகாரம் தொடர்பாக முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளையும் மத்திய அரசு ஏற்றுள்ளது. இதனால் நாடு தழுவிய அளவில் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர். ஒரு விஷயத்தை தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது.

ரீல்ஸ் போட்ட பிரதமர் மோடி

மாணவர்கள் போராடினால் அரசை செவிசாயக்க வைக்க முடியும். மாற்றத்தை கொண்டு வர முடியும் என்பதை நிரூபித்துள்ளனர். குறிப்பாக சமூக வலைதளங்களின் ஆதிக்கத்தை உணர்ந்து பிரதமர் மோடியை ரீல்ஸ் போட வைத்திருக்கிறது. சுமார் 22 லட்சம் இளைஞர்கள், வருங்கால இந்தியாவை பிரதிபலிக்கும் மாணவர்கள் தங்களது எதிர்காலத்தை சிறப்பாக அமைத்து கொள்ள நீட் தேர்வை எழுதி மருத்துவப் படிப்பில் சேர காத்திருந்தனர். ஆனால் எதிர்பாராத வகையில் நடந்த வினாத்தாள் கசிவு இளைஞர்களை கொந்தளிப்பில் ஆழ்த்தியது.

அரசியலை கவனிக்க தொடங்கியிருக்கும் இளைஞர்கள் ! அடுத்தது என்ன?

12 ஆண்டுகளில் பாஜக செய்யாத விஷயம்

தங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். இனி ஒரு முறை இத்தகைய தவறு நடந்துவிடக் கூடாது என அவர்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர். அசுர பலத்துடன் மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக கடந்த 12 ஆண்டுகளில் செய்யாத ஒரு விஷயத்தை செய்ய வைத்திருக்கின்றனர். இது அரசியல் ரீதியாக ஏற்படுத்தப் போகும் தாக்கம் தான் மிகவும் கவனிக்க வேண்டியுள்ளது. கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அடுத்தகட்டமாக அரசியல் கட்சியாக தீவிரமாக இயங்கப் போகிறதா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

2029 மக்களவைத் தேர்தலில் என்ன நடக்கும்?

அதேசமயம் காங்கிரஸ் உடன் கைகோர்த்து முன்னெடுக்கும் எந்த ஒரு விஷயமும் பாஜகவிற்கு தான் சாதகமாக முடியும் என்று பத்திரிகையாளர் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். இதுபற்றி மேலும் பேசுகையில், மத்தியில் ஆளும் பாஜக அரசு பல்வேறு மசோதாக்களை கடும் எதிர்ப்புகளை மீறி நிறைவேற்றியுள்ளது. விவசாயிகள் சட்டம் போன்ற ஒரு சில விஷயங்களுக்கு மட்டுமே செவிசாய்த்துள்ளது. இந்த சூழலில் 2029ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலை நாடு எதிர்கொள்ளப் போகிறது. அப்போது மாணவர்களின் புதிய இயக்கம் எந்த முடிவை எடுக்கும் என்று தெரியவில்லை.

CJP தனித்து நின்றால் காங்கிரஸ்க்கு பின்னடைவு

இருப்பினும் நம்முடைய குரலுக்கு பிரதமர் மோடியே செவிசாய்க்கிறார் எனக் கருதி, தேர்தலில் களம் காண முடிவெடுக்கலாம். ஏனெனில் மாணவர்களின் போராட்டம் புதிய நம்பிக்கையை விதைத்துள்ளது. காங்கிரஸ் கட்சி உடன் கைகோர்த்தால் பாஜகவிற்கு நெருக்கடி ஏற்படும். ஆனால் தனித்து நின்றால், அது மூன்றாவது அணியின் உருவாக்கமாக பார்க்கப்படும். அது பாஜகவிற்கு சாதகமாக மாறிவிடும் என்று தெரிவித்தார்.

Source link