தேசிய உயிரியல் பூங்காவில் பறவை, விலங்குகளை ஒரு நாள் மட்டும் தத்தெடுக்கும் திட்டம் பரிசீலனை

புதுடில்லி: புதுடில்லி தேசிய உயிரியல் பூங்காவில் பறவைகள், ஊர்வன மற்றும் கரும்புலி ஆகியவற்றை, 2022 – 2023ம் ஆண்டில், 39 பேர் தத் தெடுத்த வகையில், 20.47 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.

இதுகுறித்து, புது டில்லி தேசிய உயிரியல் பூங்கா அதிகாரி ஒருவர் கூறியதாவது:

உயிரியல் பூங்காவில் பறவைகள் மற்றும் விலங்குகளை தத்தெடுக்கும் திட்டம் 2021ம் ஆண்டு துவக்கப்பட்டது. ஆரம்பத்தில் சிறிய விலங்குகள் மீது மக்கள் அதிக ஆர்வம் செலுத்தினர்.

சரிவு இதில், 2022 – 2023ம் நிதியாண்டில், 39 பேர் பறவைகள், ஊர்வன மற்றும் கரும்புலி ஆகியவற்றை தத்தெடுத்த வகையில், 20.47 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்தது. ஆனால், 2023 – 20-24ம் நிதியாண்டில் வருமானம் 18 லட்சம் ரூபாயாக குறைந்தது.

கடந்த, 2024 – 20-25ம் ஆண்டில், 15 பேர் விலங்குகளைத் தத்தெடுத்த வகையில், 13.17 லட்சம் ரூபாயும், 2025 – 20-26ம் ஆண்டில், விலங்குகள் மற்றும் பறவைகளை, 17 பேர் தத்தெடுத்த வகையில், 2.3 லட்சம் ரூபாயும் வருமானம் கிடைத்துள்ளது.

தத்தெடுப்பு கட்டணம்

இனம் வாரியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புட்ஜெரிகர் போன்ற சிறிய பறவைகளை ஓராண்டு தத்தெடுக்க, 700 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதேநேரத்தில், ஆந்தைக்கு 9,000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஊர்வனவற்றில், இந்திய நட்சத்திர ஆமைக்கு, 3,500 ரூபாயும், சதுப்பு நில முதலைக்கு 30,000 ரூபாயும் ஓராண்டு தத்தெடுப்பு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

பராமரிப்பு

பிளாக் பக் மற்றும் இந்திய பன்றி, மான் ஆகிவற்றுக்கு 12,000 ரூபாய், நரிக்கு 1,20,000 ரூபாய், ஓநாய்க்கு 1,80,000 ரூபாய் தத்தெடுக்க கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டில்லி தேசிய உயிரியல் பூங்காவில், 92 வகையான பறவைகள், ஊர்வன மற்றும் பாலுாட்டி வகைகளைச் சேர்ந்த 1,100 விலங்குகள் பராமரிக்கப்படுகின்றன.

இயற்கையான வாழ்விடங்களை ஒத்திருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட கூண்டுகளில் அமைக்கப்பட்டுள்ளன.

மக்களின் ஈடுபாட்டையும் பொ றுப்புணர்வையும் அதிகரிப்பதை நோக்கமாக கொண்டு விலங்கு தத்தெடுப்பு திட்டம் துவக்கப்பட்டது. தனி நபர்கள், விலங்கு ஆர்வலர்கள், கல்வி நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் சேவை அமைப்புகள் இந்த திட்டத்தில் பங்களிக்க வேண்டும்.

இந்தத் திட்டத்தில் வசூலிக்கப்படும் நிதி விலங்குகளின் பராமரிப்பு, அதன் வாழ்விட பராமரிப்பு மற்றும் பாதுகாப்புக்காக செலவு செய்யப்படுகிறது.

ஒரு தனி நபரோ ஒரு நிறுவமனமோ ஒரு வருடத்துக்கு ஒரு விலங்கைத் தத்தெடுக்கலாம். அடுத்த ஆண்டு தத் தெடுப்பை புதுப்பித்தும் கொள்ளலாம். தத்தெடுப்பாளர்கள் உயிரியல் பூங்காவில் கட்டணம் இன் றி அனுமதிக்கப்படுவர்.

வாய்ப்பு

தாங்கள் தத்தெடுத்த விலங்குகளுக்கு உணவுஅளிக்கும் வாய்ப்பு வழங்கப்படும். மேலும், பிறந்த நாள் மற்றும் ஆண்டு விழாக்கள் போன்ற நிகழ்வுகளை உயிரியல் பூங்காவில் விலங்குகளுடன் கொண்டாடலாம். அதற்கான சிறப்பு உறுப்பினர் அட்டை வழங்கப்படும்.

மக்களின் பங்களிப்பை அதிகரிக்க, ஒரு நாள் மற்றும் ஒரு மாதம் மட்டும் தத்தெடுக்கும் குறுகிய கால திட்டம் பரிசீலனையில் உள்ளது. அதற்கான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு விரைவில் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Source link