தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டம்: வரவேற்பு பேனரில் எடப்பாடி பழனிச்சாமி படம் புறக்கணிப்பு? – trichy nda public meeting controversy!

இதுகுறித்து, பேசிய சிலர்,

“இப்படி, திட்டமிட்டுத் தவிர்க்கப்பட்டுள்ளதா அல்லது இது ஒரு கவனக்குறைவா என்ற கேள்வி எழுந்துள்ளது. முன்னதாக, இதே போன்ற ஒரு கூட்டத்தில் பெரியார் படம் வைக்கப்பட்டு பின்னர் நீக்கப்பட்ட சர்ச்சை ஓய்வதற்குள், தற்போது எடப்பாடியின் படம் விடுபட்டிருப்பது அ.தி.மு.க தொண்டர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது ஒரு ‘புறக்கணிப்பு’ என்றே அக்கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகள் கருதுகின்றனர்.

edappadi palanichami

edappadi palanichami
d.dixith

அதேநேரம், விழா மேடையிலும், அந்த பகுதியில் அங்கங்கே தனித்தனியாகவும் இடப்படியின் போட்டோ, வானுயர கட்டவுட்கள் வைக்கப்பட்டிருந்தன. ஆனால், அந்த குறிப்பகுதியில் சில வரவேற்பு வளைவுகளில் மட்டும் அவரது போடோ இடம்பெறவில்லை. மாறாக, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போட்டோக்கள் இடம்பெற்றிருந்தன. இது, அ.தி.மு.க-வினருக்கு தெரியாமல் நடந்ததா, அல்லது அவர்களுக்கு தெரிந்தே இதை அனுமதித்தார்களா என்பது தெரிவில்லை” என்றார்கள்.

Source link