தேசிய பங்கு சந்தையிலும் கச்சா எண்ணெய் வர்த்தகம் ஏப்., 13 முதல் அறிமுகம்

தே சிய பங்குச்சந்தையில் வரும் ஏப்., 13ம் தேதி முதல் ‘என்.எஸ்.இ., டேட்டட் பிரென்ட் கச்சா எண்ணெய்’ முன்பேர வர்த்தகம் துவங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எரிசக்தி துறையில் தனது வர்த்தகத்தை விரிவாக்கும் நோக்கில் ‘எஸ் அண்டு பி., குளோபல் எனர்ஜி'(பிளாட்ஸ்) நிறுவனத்துடன் தேசிய பங்குச்சந்தை கைகோர்த்துள்ளது.

உலகளாவிய எரிசக்தி சந்தையில் விலைகளை தீர்மானிக்கும் அங்கீகாரம் பெற்ற ‘பிளாட்ஸ்’ அமைப்பின் விலை புள்ளிகளின் அடிப்படையில், இந்த பிரென்ட் கச்சா முன்பேர வர்த்தகம் இருக் கும்.

செபியின் சமீபத்திய அனுமதியை தொடர்ந்து, அடுத்த காலாண்டில் இருந்து இயற்கை எரிவாயு ஒப்பந்தங்களையும் அறிமுகப்படுத்த என்.எஸ்.இ., திட்டமிட்டுள்ளது.

தற்போது டபுள்யு.டி.ஐ., கச்சா எண்ணெய் ஒப்பந்தங்களில் 16 சதவீத சந்தை பங்கை கொண்டுள்ள என்.எஸ்.இ., அடுத்த முன்பேர வர்த்தக ஒப்பந்த முதிர்வுக்குள், அதை 30 சதவீதத்துக்கும் மேலாக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளது.

முன்னதாக, மார்ச் 16ம் தேதியன்று, 10 கிராம் தங்கத்துக்கான முன்பேர வர்த்தகத்தை தேசிய பங்குச்சந்தை துவங்கியது. தற்போது கமாடிட்டி சந்தையில் எம்.சி.எக்ஸ்., ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், என்.எஸ்.இ.,யின் இந்த அதிரடி விரிவாக்கம், எரிசக்தி வர்த்தக பிரிவில் போட்டியை தீவிரப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source link